அரசு பள்ளிகளில் இன்று தொடங்கப்பட்டது வானவில் மன்றம்.. எப்படி செயல்படும் இந்த வானவில் மன்றம்?
அரசு பள்ளிகளில் இன்று முதல் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது, இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கி வைத்தார்.
அரசி பள்ளிகளில் இன்று முதல் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது, திருச்சியில் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசுப்பள்ளியில் இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் இயங்கும் 13,000 த்துக்கும் மேற்பட்ட அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்கும் வகையில் ‘வானவில் மன்றம் ’ என்ற அமைப்பு பள்ளிகளில் இன்று தொடங்கப்படுகிறது. தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்துவற்கான புதிய முயற்சியாக வானவில் மன்றம் என்ற திட்டம் அனைத்து அரசு பள்ளிகளில் இன்று தொடங்கப்படுகிறது.
இதற்கு முன் ஜூன் மாதம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் STEM வகுப்புகள் தொடங்கப்பட்டது.
STEM வகுப்புகள்:
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில், நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் அறிவியல் பரிசோதனைகள், உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதுடன் மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
STEM திட்டத்தை ,IIT மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார். STEM - Science, technology, engineering,maths ஆகிய பாடங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதாகும். இந்நிலையில் 2022-23ஆம் ஆண்டுகளில் STEM வகுப்புகள் நடத்த வழங்கப்பட்ட அறிவிப்பை வாபஸ் பெற்ற பள்ளிக்கல்வித்துறை இத்திட்டம் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க IIT திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
STEM வகுப்புக்கான ஒரு அங்கமாக தற்போது வானவில் மன்றம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தில் சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த வானவில் மன்றத்தில் ஆசிரியர்கள் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக சென்று அந்தந்த பாடத்திற்கான செயல்முறையை விளக்குவர், அதற்கான தேவையான பொருட்களை ஆசிரியர்களே கொண்டு வருவார்கள் எனவும், இவ்வாறு செய்வதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட்டு practical studies மேம்படுத்த உதவும் என கூறுகின்றனர்.
இந்த வானவில் மன்றம் திட்டத்தை இன்று திருச்சியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இதற்காக இன்று காலை சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொள்கிறார். இதற்கான விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் சுதன், கூடுதல் இயக்குநர் ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குநர் அறிவொளி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இரண்டு நாள் பயணத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
Twitter : வாவ்.. இனிமே ட்விட்டர்ல இத்தனை வார்த்தைகளை எழுதலாமா? எலான் மஸ்கின் பதில் இணையத்தில் வைரல்!