மேலும் அறிய

Rain Update: கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை!

சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்,

கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை நிலவரம் குறித்து முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ”மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக,

”05.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

06.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பதூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

07.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர். ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

08.10.2022 மற்றும் 09.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்,

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்);

சின்கோனா (கோயம்புத்தூர்), ஏற்காடு (சேலம்) தலா 3, மன்னார்குடி (திருவாரூர்), தேவாலா (நீலகிரி), பார்வூட் (நீலகிரி), மடத்துக்குளம் (திருப்பூர்), தேவாலா (நீலகிரி), ஹரிசன் எஸ்டேட், செருமுள்ளி (நீலகிரி) தலா 2, நடுவட்டம் (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), கல்லணை

(தஞ்சாவூர்), தாளவாடி (ஈரோடு), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), பவானிசாகர் (ஈரோடு), பெரியார் (தேனி), ராசிபுரம் (நாமக்கல்), சங்கரன்கோவில் (தென்காசி), தூத்துக்குடி, தத்தியெங்கர்பேட்டை (திருச்சி), மேல் கூடலூர் (நீலகிரி), பந்ததூர் (நீலகிரி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

05.10.2022 மற்றும் 06.10.2022: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள். வட தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

05.10.2022 முதல் 08.10.2022 வரை: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஓட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

09.10.2022 மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே ல கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்,

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஜூலை 14-ல் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்குப் போறீங்களா? இதோ முழு விவரம்!
ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஜூலை 14-ல் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்குப் போறீங்களா? இதோ முழு விவரம்!
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
TNEB : மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
TNEB : மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
Embed widget