மேலும் அறிய

Rain Alert: மக்களே மழை எச்சரிக்கை.. தலைநகரம் தொடங்கி டெல்டா வரை.. 20 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் மழையாம்..!

Rain Alert: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி  நேரத்தில் 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி  நேரத்தில் 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், விருதுநகர், மதுரை, திருவண்ணாமலை, சேலம், சிவகங்கை, புதுக்கோட்டை  ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காரைக்காலிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 

பள்ளி கல்லூரி விடுமுறை

மழை நாளையும் நீடித்தால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முடிவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வானிலை நிலவரம்

10.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

11.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

12.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

13.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

14.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

15.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

வங்கக்கடல் பகுதிகள்: 

10.07.2023: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

12.07.2023: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

13.07.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல்    பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்? - வானிலை கொடுத்த வார்னிங்
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்? - வானிலை கொடுத்த வார்னிங்
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Iran Announcement: ''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Embed widget