மேலும் அறிய

School Leave: புதுக்கோட்டை: பள்ளிக்கு விடுமுறை; சோகத்தில் மாணவர்கள்; காரணம் இதுதான்..!

காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவிகள் 4 பேர் படித்த பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவிகள் 4 பேர் படித்த பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை புதுக்கோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.  மாணவிகள் இறந்தது பள்ளி மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

மாணவிகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த பிலிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6,7,8ஆம் வகுப்புகள் படிக்கும் மாணவிகள் 15 பேரை கால்பந்து போட்டியில் விளையாட ஆசிரியர்கள் ஜெயசகேவிய எம்ப்பாயுலு, திலகவதி ஆகியோர் காண்கானிப்பில் சென்றுள்ளனர். மாணவிகளை ஆம்னி வேனில் அழைத்துக் கொண்டு திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்துள்ளனர். 

காலை 10 மணியளவில் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவிகள் தோல்வியை தழுவினர் . இதையடுத்துஅவர்கள் கல்லூரியை விட்டு வெளியேறி கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை சுற்றிப் பார்க்க சென்றுள்ளனர். மாயனூர் கதவணைப் பகுதியை சுற்றிப் பார்த்த பிறகு சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் காவிரி ஆற்றில் இறங்கி சென்றனர். 

ஆற்றின் நடுவே தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் மணலில் நடந்து சென்று நடு ஆற்றில் இருந்த தண்ணீரில் குளித்துள்ளனர். ஆழமான பகுதி என்பதால் குளித்துக் கொண்டிருந்த மாணவிகளில் 8ம் வகுப்பு மாணவி தமிழரசி, 7ம் வகுப்பு மாணவி சோபியா மற்றும் 6ம் வகுப்பு மாணவிகள் இனியா, லாவண்யா ஆகிய 4 பேர் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். 

மாணவிகளின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் மாணவிகளை மீட்க முயற்சித்ததுடன்  தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.  அங்கு வந்த கரூர் மற்றும் முசிறி தீயணைப்பு நிலைய வீரர்கள் பரிசல் மூலமாகவும்,  தண்ணீரில் இறங்கியும் தேடினர். அப்போது ஒருவர் பின் ஒருவராக  நீரில் மூழ்கி இறந்த மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டது. 

நிவாரணம் அறிவிப்பு

இதனை அடுத்து, உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி  உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.   இதுகுறித்து வெளியிட்டடுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கால்பந்து விளையாட்டில் கலந்துகொண்ட பின்னர் இன்று 15.2.2023 காலை கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் கிராமத்தில் செல்லாண்டியம்மன் கோவில் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, சோபியா த/பெ.வெள்ளைச்சாமி (7ம் வகுப்பு). தமிழரசி த/பெ. ராஜ்குமார் (8ம் வகுப்பு) இனியா த/பெ.மோகன்குமார் (6ம் வகுப்பு) மற்றும் லாவண்யா த/பெ. பெரியண்ணன் 6ம் வகுப்பு) ஆகிய நான்கு மாணவிகள் எதிர்பாராதவிதமாக சுழலில் சிக்கி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

மேலும் இவ்விவகாரத்தில் புதுக்கோட்டை பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொட்டுமணி, இடைநிலை ஆசிரியர் செபகாயூ இப்ராஹிம், பட்டதாரி ஆசிரியர் திலகவதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தொடக்க கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

US Deports Indians: இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா... 205 பேருடன் புறப்பட்ட முதல் விமானம்...
இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா... 205 பேருடன் புறப்பட்ட முதல் விமானம்...
China Vs America: எனக்கே வரி ஏத்துறியா.? இந்தா வாங்கிக்கோ... அமெரிக்க இறக்குமதிக்கு வரியை போட்டுத்தாக்கிய சீனா...
எனக்கே வரி ஏத்துறியா.? இந்தா வாங்கிக்கோ... அமெரிக்க இறக்குமதிக்கு வரியை போட்டுத்தாக்கிய சீனா...
MTC Driver, Conductor Sacked: சென்னை மாநகரப் பேருந்தில் ஓட்டுநரும், நடத்துநரும் செய்த காரியம்... அவங்க கதி என்ன ஆச்சு தெரியுமா.?
சென்னை மாநகரப் பேருந்தில் ஓட்டுநரும், நடத்துநரும் செய்த காரியம்... அவங்க கதி என்ன ஆச்சு தெரியுமா.?
Thiruparankundram: நெருங்கும் தைப்பூசம்! திருப்பரங்குன்றத்தில் தொடரும் பதற்றம் - வேதனையில் பக்தர்கள்
Thiruparankundram: நெருங்கும் தைப்பூசம்! திருப்பரங்குன்றத்தில் தொடரும் பதற்றம் - வேதனையில் பக்தர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Modi visit US: வரியை உயர்த்திய ட்ரம்ப்! அலறும் உலக நாடுகள்! அமெரிக்கா புறப்படும் மோடி!BJP ADMK Alliance : அண்ணாமலை தான் தலைவர்!அதிமுகவுடன் DEAL OVER..சாதித்து காட்டிய பாஜகKerala Boy Viral Video : அங்கன்வாடியில் CHICKEN FRY! ஆசையாய் கேட்ட சிறுவன்..OK சொன்ன அமைச்சர்Tamil Man American Woman Marriage : காஞ்சி பட்டில் அமெரிக்க பெண்கரம்பிடித்த தமிழ்நாட்டு இளைஞர்..களைகட்டிய கல்யாணம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Deports Indians: இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா... 205 பேருடன் புறப்பட்ட முதல் விமானம்...
இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா... 205 பேருடன் புறப்பட்ட முதல் விமானம்...
China Vs America: எனக்கே வரி ஏத்துறியா.? இந்தா வாங்கிக்கோ... அமெரிக்க இறக்குமதிக்கு வரியை போட்டுத்தாக்கிய சீனா...
எனக்கே வரி ஏத்துறியா.? இந்தா வாங்கிக்கோ... அமெரிக்க இறக்குமதிக்கு வரியை போட்டுத்தாக்கிய சீனா...
MTC Driver, Conductor Sacked: சென்னை மாநகரப் பேருந்தில் ஓட்டுநரும், நடத்துநரும் செய்த காரியம்... அவங்க கதி என்ன ஆச்சு தெரியுமா.?
சென்னை மாநகரப் பேருந்தில் ஓட்டுநரும், நடத்துநரும் செய்த காரியம்... அவங்க கதி என்ன ஆச்சு தெரியுமா.?
Thiruparankundram: நெருங்கும் தைப்பூசம்! திருப்பரங்குன்றத்தில் தொடரும் பதற்றம் - வேதனையில் பக்தர்கள்
Thiruparankundram: நெருங்கும் தைப்பூசம்! திருப்பரங்குன்றத்தில் தொடரும் பதற்றம் - வேதனையில் பக்தர்கள்
உப்புமா வேணாம்; பிரியாணியும் பொரிச்ச கோழியும் வேணும்! பால்வாடி மழலை வீடியோ வைரல்- அமைச்சர் க்யூட் ரிப்ளை!
உப்புமா வேணாம்; பிரியாணியும் பொரிச்ச கோழியும் வேணும்! பால்வாடி மழலை வீடியோ வைரல்- அமைச்சர் க்யூட் ரிப்ளை!
White house Vs Rashtrapati Bhavan: வெள்ளை மாளிகை Vs குடியரசு தலைவர் மாளிகை - பிரமாண்டத்தின் உச்சம்? இவ்வளவு வசதிகளா?
White house Vs Rashtrapati Bhavan: வெள்ளை மாளிகை Vs குடியரசு தலைவர் மாளிகை - பிரமாண்டத்தின் உச்சம்? இவ்வளவு வசதிகளா?
CM Stalin TNSWA: ஆணையத்திற்கு வயது 6, ஆனால் செய்த வேலை 0 - அறிவிப்பை வெளியிடுவாரா முதலமைச்சர் ஸ்டாலின்?
CM Stalin TNSWA: ஆணையத்திற்கு வயது 6, ஆனால் செய்த வேலை 0 - அறிவிப்பை வெளியிடுவாரா முதலமைச்சர் ஸ்டாலின்?
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அரசை நோக்கிப் பாயும் கேள்விகள்!
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அரசை நோக்கிப் பாயும் கேள்விகள்!
Embed widget