Schools Holiday: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை
புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு பள்ளிகளுக்கு 17, 18 ஆகிய இரண்டு தேதிகளில் விடுமுறை அளித்து கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
![Schools Holiday: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை Puducherry Schools Declared 2 Days Holiday Ahead Lok Sabha Election 2024 TNN Schools Holiday: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/09/d2edc3adc670aa83fc71e3713eb0ea281712666302197739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Lok sabha election: புதுச்சேரியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு (17, 18) இரண்டு நாள் விடுமுறை அளித்து கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
தபால் வாக்குகள்
தமிழ்நாட்டில் தபால் வாக்குகள் பெறும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். 18ஆம் தேதி வரை 85 வயதுக்கு அதிகமான மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பெறப்படும்.
தேர்தல் விடுமுறை
இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை தமிழ்நாடு ஆளுநரின் உத்தரவின் பேரில் தமிழக அரசின் தலைமை செயலர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி பள்ளிகள் விடுமுறை
அதேபோல் புதுச்சேரியில் நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வரும் 17 மற்றும் 18 ஆகிய செய்திகளில் அரச மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது பள்ளிக்கல்வி அறிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)