Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை மின் தடை! இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Puducherry Power Shutdown (16.09.2025): புதுச்சேரியில் நாளை எங்கெல்லாம் மின்சாரம் தடை உள்ளது என்பதை கீழே அறிந்து கொள்ளலாம்.

Puducherry Power Cut (16.09.2025): புதுச்சேரியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதுச்சேரி 110 கி.வோ வில்லியனூர் காலாப்பட்டு மின்பாதையில் சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 16-09-2025 செவ்வாய்க்கிழமை கீழ்க்குறிப்பிடப்படும் பகுதிகளில், அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் விநியோகம் முற்றிலும் தடைபடுமென்று பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
கனகசெட்டிகுளம் மின்பாதை பராமரிப்பு பணி
- சுணாமி குடியிருப்பு
- PIMS மருத்துவமனை
- மத்திய சிறைச்சாலை
- ஷாஷன் நிறுவனம்
- ஸ்டடி பள்ளி
- நவோதயா வித்யாலயா பள்ளி
- சட்டக் கல்லூரி
- அம்மன் நகர்
- DAV பள்ளி
- பெரியகாலாப்பட்டு (மேற்கு பக்கம்) மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
ஆலங்குப்பம் மின்பாதை பராமரிப்பு பணி
- புதுச்சேரி பல்கலைக்கழகம் ஊழியர்கள் குடியிருப்பு
- பாண்டிச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
- ஆலங்குப்பம்
- சஞ்சீவி நகர்
- கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் (கருவடிகுப்பம்)
பிள்ளைச்சாவடி மின்பாதை பராமரிப்பு பணி
மின்தடை பகுதிகள் :
- சின்னகாலாப்பட்டு
- புது நகர்
- மெட்டு தெரு
- பிள்ளைச்சாவடி
- அன்னை நகர்
- V.C. 4. MSME மையம்
- புதுச்சேரி பல்கலைக்கழகம் கலாச்சார வளாகம்
- பெரியகாலாப்பட்டு
- கனகசெட்டிகுளம். உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
கோர்க்காடு துணை மின் நிலையம் பராமரிப்பு பணி
கோர்க்காடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 22 கி.வோ. மங்கலம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் 16-09-2025 மேற்கொள்ள இருப்பதால் செவ்வாய்கிழமை காலை 10.00 மணியிலிருந்து மதியம் 02.00 மணி வரை கிழ் குறிப்பிடும் பகுதிகளில் உள்ள அனைத்து மின் மின் நுகர்வோர்களுக்கும் விநியோகம் தடைபடுமென்று பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
மின்தடை பகுதிகள்:
- மங்கலம்
- வடமங்கலம்
- பங்கூர்
- அரியூர்
- அனந்தபுரம்
இந்த பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
- துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை





















