Puducherry: இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி
இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி:
புதுச்சேரி : இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிக்கு தேசிய மருத்துவ ஆணையத்திடமிருந்து அங்கீகாரம் கிடைப்பதில் தாமதமான நிலையில், தற்போது இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் அரசு கல்லூரியில் MBBS 180 இடங்கள் உள்ளன. இதில் புதுச்சேரி மாணவர்களுக்கு 130 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 27 இடங்களும், NRI ஒதுக்கிட்டு 22 இடங்களும் ஒதுக்கப்படுகிறது.
மாணவர் சேர்க்கை :
புதுச்சேரி அரசு இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பித்தது. இந்த மருத்துவக் கல்லூரியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி அதை தேசிய மருத்துவ ஆணையத்திடம் இணைக்காதது, மருத்துவர்கள், ஊழியர்கள், மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு வசதியை ஏற்படுத்தாதது என்பன உள்ளிட்ட குறைகளை சுட்டிக்காட்டி இந்த ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டது.
மருத்துவ கல்லூரி அங்கீகாரம் நீட்டிப்பு :
இந்த நிலையில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். அதைத் தொடர்ந்து ஆணைய அதிகாரிகள் காணொளி காட்சி மூலம் மீண்டும் ஆய்வு செய்தனர். இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நிச்சயம் நடக்கும் என முதல்வர் மற்றும் ஆளுநர் தெரிவித்தனர். மாணவர்கள் சேர்க்கைக்கு வரும் 26 ஆம் தேதி மூன்று மணிக்குள் மணிக்குள் தேசிய மருத்துவ ஆணையத்திடமிருந்து அங்கீகாரம் கிடைக்க வேண்டும், இல்லையென்றால் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கையில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டது. இதனால் பெற்றோர்கள் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வந்தது, இந்த நிலையில் நேற்று மாலை தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரத்தை வழங்கி ஐந்து ஆண்டுகள் அங்கீகாரத்தை நீடிப்புதாக உறுதி அளித்துள்ளது.
முதல்வர் ரங்கசாமி கூறுகையில்...
அரசு மருத்துவர் மற்றும் செவிலியர் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும். மேலும் கல்லூரியில் எந்த விதமான குறைகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்