Schools Colleges Holiday: கனமழை எதிரொலி ; புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Puducherry Schools Colleges Holiday(27-11-2024) கனமழை காரணமாக நாளை புதன்கிழமை (27.11.2024) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மேற்படி கன மழையை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மைத் துறையின் உதவி அழைப்பு எண்களான 112 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பொது மக்களின் நலன் கருதி பிரத்தியேகமாக மெசேஜ் வடிவிலான புகார்களை மட்டும் பதிந்திட 9488981070 என்கிற whatsapp எண்ணினை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 10 மணி அளவில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (26-11.2024) காலை 10மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து தெற்கு தென்கிழக்கே 590 மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே சென்னையிலிருந்து தெற்கு தென்கிழக்கே 710 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (27-11-2024) புயலாக வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது.
இது அதற்கடுத்த இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எப்போது கரையை கடக்கும்? | Fengal Cyclone Landfall
மேலும், புயல் எங்கு கரையை கடக்கும்?; எப்போது கரையை கடக்கும் என்பது குறித்து இன்னும் கணிக்கப்படவில்லை என வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இன்றை வானிலை:
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
27-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.