புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறையில் ஆளுநர் தமிழிசையின் காலில் விழுந்து கைதிகள் கண்ணீர் மல்க கோரிக்கை
புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறையில் ஆளுநர் தமிழிசையின் காலில் விழுந்து கைதிகள் கண்ணீர் மல்க கோரிக்கை
புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறையில் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தோட்டத்தை திறந்து வைத்தார், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன். நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க கோரி சிறை கைதிகள் கோரிக்கை. துணைநிலை ஆளுநர் தமிழிசையின் காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை. கைதிகள் அமைத்த தோட்டத்தை சுற்றி பார்த்த தமிழிசை செளந்தரராஜன், அவர்களை பாராட்டினார்.
புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறையில் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தோட்டத்தை திறந்து வைத்த ஆளுநர் தமிழிசையின் காலில் விழுந்து நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க கைதிகள் கண்ணீர் மல்க கோரிக்கை...@abpnadu @DrTamilisaiGuv @SRajaJourno pic.twitter.com/p8gPKZqABU
— SivaRanjith (@Sivaranjithsiva) October 31, 2022
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை, தண்டனை கைதிகள் என 200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மறுவாழ்வுக்காக அரபிந்தோ சொசைட்டி சார்பில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. யோகா, நடன பயிற்சி உள்ளிட்ட அளிக்கப்படுகிறது. இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் அங்கு ஒருங்கிணைந்த பண்ணைத்தோட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக 2.6 ஏக்கர் நிலத்தை கைதிகள் மூலம் சமன்படுத்தப்பட்டது. அதில் 60 வகையான பழங்கள், மூலிகை செடிகள் என 50 ஆயிரம் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. உரம், பூச்சி கொல்லிகள் தயாரிக்க சிறை வளாகத்தில் மாடு, ஆடு மற்றும் முயல்களும் வளர்க்கப்படுகிறது. முற்றிலும் சிறை கைதிகளை கொண்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இன்று சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தோட்டத்தை ஆளுநர் தமிழிசை திறந்துவைத்தார்.