மேலும் அறிய

புதுச்சேரி மகளிர், இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! பழம்-காய்கறி தள்ளுவண்டிக்கு 50% மானியம்!

புதுச்சேரியில் பழம், காய்கறி தள்ளுவண்டி பெற 50% மானியம், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியல் வெளியீடு - ஆட்சேபனை இருந்தால் செப்.10-க்குள் தெரிவிக்கலாம்.

புதுச்சேரி: மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், பழம் மற்றும் காய்கறி தள்ளுவண்டி வாங்குவதற்கு 50 சதவீத பிந்தைய மானியம் வழங்கும் திட்டத்தை புதுச்சேரி அரசு செயல்படுத்தி வருகிறது.

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, தோட்டக்கலை அலுவலகம் மற்றும் புதுச்சேரி மாநில தோட்டக்கலை வளர்ச்சி சங்கம் ஆகியவற்றின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சுய வேலைவாய்ப்புக்கு ஊக்கம்

மகளிர் மற்றும் இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்கி வருமானம் ஈட்டுவதற்கும், பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்வதன் மூலம் சுய வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, பழம் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்வதற்கான தள்ளுவண்டி பெறுவதற்கு தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 50 சதவீத பிந்தைய மானியம் வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு

2026-ம் ஆண்டிற்கான பழம் மற்றும் காய்கறி தள்ளுவண்டி வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கும், சமூக தணிக்கைக்கும் (Social Audit) உட்படுத்தும் வகையில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை புதுச்சேரி பிராந்தியத்தில் சம்பந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர் பட்டியல் புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்

தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை அல்லது புகார் இருந்தால், அதனை பொதுமக்கள் உரிய முறையில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்.

இதற்காக, செப்டம்பர் 10-ம் தேதிக்குள் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் அமைந்துள்ள கூடுதல் வேளாண் இயக்குநர் (தோட்டக்கலை) அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெறப்படும் ஆட்சேபனைகள் மற்றும் புகார்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளவர்கள், தங்களது பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகை மற்றும் வேளாண் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

சிவகங்கையில் 1.2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்: பெற்றோர்களே, உங்கள் கடமை!
சிவகங்கையில் 1.2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்: பெற்றோர்களே, உங்கள் கடமை!
Villupuram Power Cut : விழுப்புரத்தில் நாளை மின்சாரம் இருக்காது! 40-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு மின்தடை அறிவிப்பு!
Villupuram Power Cut : விழுப்புரத்தில் நாளை மின்சாரம் இருக்காது! 40-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு மின்தடை அறிவிப்பு!
திருப்பரங்குன்றம் தீபம்: திமுக தவறை விஜய் அரசு செய்யக்கூடாது - அண்ணாமலை !
திருப்பரங்குன்றம் தீபம்: திமுக தவறை விஜய் அரசு செய்யக்கூடாது - அண்ணாமலை !
உண்மையான பெயரை மறைத்த விஜய்... “இதை செய்யாதவர்கள் பாரதத்தாயின் குழந்தையாக இருக்க முடியாது” - எச்.ராஜா ஆவேசம்
உண்மையான பெயரை மறைத்த விஜய்... “இதை செய்யாதவர்கள் பாரதத்தாயின் குழந்தையாக இருக்க முடியாது” - எச்.ராஜா ஆவேசம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படும்" - கர்நாடக முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
சண்டே பிளான் வச்சிருக்கீங்களா? - சென்னையில் மழை பெய்யும்? 10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்... லிஸ்ட் இதோ!
சண்டே பிளான் வச்சிருக்கீங்களா? - சென்னையில் மழை பெய்யும்? 10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்... லிஸ்ட் இதோ!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! - தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தவும் உத்தரவு: முழுவிவரம் இதோ!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! - தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தவும் உத்தரவு: முழுவிவரம் இதோ!
"குறுவை போச்சு! சம்பாவும் கருகுது!": Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!
Embed widget