மேலும் அறிய

புதுச்சேரி : இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக 30-ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது.. வாரிய தலைவர் பதவி யாருக்கு ?

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக வருகிற 30-ஆம் தேதி புதுச்சேரி சட்டப் பேரவை கூடுகிறது. வாரிய தலைவர் பதவி இடங்களை நியமிக்கவும் திட்டம்

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட சட்டப் பேரவை இருந்து வருகிறது. புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் மாத இறுதியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு வந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியிலும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாத நிலையே இருந்து வருகிறது. அதாவது, மார்ச் மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன்பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகிவிட்டது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்த பிறகாவது முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போதும் அதே நிலைதான் தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில் 6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்பது மரபாகும். அந்த வகையில் கடந்த (பிப்வரி) மாதம் 23-ஆம் தேதி புதுச்சேரி சட்டசபை கூடியது. அன்றைய தினம் 20 நிமிடமே சட்டசபை கூட்டம் நடந்து முடிந்தது.

புதுச்சேரி : இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக 30-ஆம் தேதி  சட்டப்பேரவை கூடுகிறது.. வாரிய தலைவர் பதவி யாருக்கு ?

இதையொட்டி இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் தற்போதும் பல்வேறு காரணங்களால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு அரசின் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக புதுவை சட்டசபை வருகிற 30-ஆம் தேதி கூட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறுகையில், இ்ம்மாத இறுதியில் சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்பட உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

அதன்படி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப் படாத நிலையில் சட்டப் பேரவையில் கவர்னர் உரை இடம் பெறாது என்று தெரிகிறது.

இதற்கிடையே என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. எம்.எல். ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டப்பட உள்ளதையொட்டி கூட்ட அரங்கு சுத்தம் செய்யப்படுவதுடன் அங்குள்ள மேஜை, நாற்காலிகள் சுத்தம்செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!

Group 4 Counselling: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்படி நடைபெறும்?- வெளியான முக்கியத் தகவல்!

Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு

TAHDCO GBS Scheme: பசுமை வணிக திட்டம் - ரூ.27 லட்சம் வரை கடன், வட்டி வெறும் 4% மட்டுமே - பயனாளர்களுக்கான தகுதிகள்?

ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Group 4 Counselling: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்படி நடைபெறும்?- வெளியான முக்கியத் தகவல்!
Group 4 Counselling: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்படி நடைபெறும்?- வெளியான முக்கியத் தகவல்!
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
TAHDCO GBS Scheme: பசுமை வணிக திட்டம் - ரூ.27 லட்சம் வரை கடன், வட்டி வெறும் 4% மட்டுமே - பயனாளர்களுக்கான தகுதிகள்?
TAHDCO GBS Scheme: பசுமை வணிக திட்டம் - ரூ.27 லட்சம் வரை கடன், வட்டி வெறும் 4% மட்டுமே - பயனாளர்களுக்கான தகுதிகள்?
Rishabh Pant Salary : ஏலத்தில் 27 கோடி! ஆனால் கைக்கு இவ்வளவு தான் வருமா? பண்ட்டின் முழு சம்பள விவரம்

”பள்ளி மாணவர்களுக்கு இனி 10 ஆயிரம் ரூபாய்” வந்தது அதிரடி அறிவிப்பு..!

”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?

TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை

Embed widget