மேலும் அறிய

TN Public Health: கொளுத்தும் வெயில்.. சுகாதார மையங்களில் ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு..

அதிகப்படியான வெப்பநிலை மற்றும் வெப்ப அலை காரணமாக சுகாதார மையங்களில் ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் தயார் நிலையில் வைக்க பொது சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். பொதுவாக மே மாதம் முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும். அக்னி நட்சத்திரத்தின்போது வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். அதாவது 40 முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

இந்த காலகட்டத்தில் தான் வெப்ப அலை வீசும். ஆனால் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் ஏப்ரல் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3வது இடம் பிடித்திருந்தது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வெப்ப அலையும் வீசும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பகல் நேரங்களில் வெளியே செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக குழந்தைகள், கருவுற்ற பெண்கள் மற்றும் பெரியவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற சூழலில் மாவட்ட ரீதியாக இருக்கும் சுகாதார அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தரப்பில் ஒரு சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், “ சுகாதார மையங்களில் வெப்பம் தொடர்பான பாதிப்புகளில் இருந்து மக்களை தற்காத்துக்கொள்ள ஓ.ஆர்.எஸ் (ORS) தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இதுகுறித்து, மாவட்ட சுகாதார அலுவலர்கள், 'ரீஹைட்ரேஷன் பாயின்ட்'களை ஏற்பாடு செய்யும் உள்ளாட்சி அமைப்புகளை ஒருங்கிணைத்து, பொது பயனாளிகளுக்கு ஓஆர்எஸ் வழங்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இந்த ரீஹைட்ரேஷன் புள்ளிகளில், ஒரு முகாமுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையிலான ORS பாக்கெட்டுகள் வெப்ப அலை காலம் முழுவதும் அந்தந்த ரீஹைட்ரேஷன் புள்ளிகளில் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த DHO களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ரீஹைட்ரேஷன் புள்ளிகளின் இருப்பிடம் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் இறுதி செய்யப்படும்.

ORS கரைசலுடன் கிடைப்பதை உறுதி செய்ய தொகுதி மருத்துவ அலுவலர் மற்றும் இரண்டாம் நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்துதல் மற்றும் காலியாகிவிட்டால் நிரப்புதல். பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துவதற்கான தரம் மற்றும் பாதுகாப்பை உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டும்.

மேலும், அந்தந்த மாவட்ட TNMSC கிடங்கில் ORS இருப்பு இருப்பதைக் கண்காணிக்கவும், தேவைப்படும்போது ORS பாக்கெட்டுகளை சரியான நேரத்தில் அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
Embed widget