மேலும் அறிய
Advertisement
சாத்தான்குளம் கொலை வழக்கில் ஜாமீன் கேட்ட சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் - சிபிஐ பதில் தர உத்தரவு
மனு மீதான விசாரணையில் சி.பி.ஐ. தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 30 ம்தேதி ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவரக்கூடிய நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் தனக்கு ஜாமின்கோரி மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த மாதம் 18ஆம் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரகு கணேஷ் ஜாமின் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ரகு கணேஷ் தனக்கு ஜாமின் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் நான் உள்பட 9 பேர் மதுரை சிறையில் உள்ளோம். இந்த வழக்கில் உள்ள 105 சாட்சிகளில் 22 பேரை மட்டுமே இது வரை விசாரித்து உள்ளனர். 20 மாதங்களுக்கும் மேலாக நீதிமன்ற காவலில் சிறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை முடியும் வரை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. எனவே எனக்கு ஜாமின் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளி சங்கர் சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 30 ம்தேதிக்கு ஒத்தி வைத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion