PM Modi TN Visit: "இசைஞானி இளையராஜா, உமையாள்புரம் சிவராமனுக்கு டாக்டர் பட்டம்.." : கவுரவித்த பிரதமர்..!
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று இளையராஜா, சிவராமனுக்கு ஆகிய இருவருக்கும் கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார்.
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி பெங்களூரில் இருந்து சென்னைக்கு இன்று தொடங்கி வைத்தார். கர்நாடகாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளை முடித்த பிறகு பிரதமர் மோடி இன்று நண்பகல் தமிழ்நாட்டிற்கு வந்தடைந்தார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை வரவேற்றார். இன்று தமிழகம் வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் காந்தி கிராம பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலமாக புறப்பட்டு மதுரை விமான நிலையத்திற்கு வந்து சாலை மாற்கமாக திண்டுக்கல் வந்தடைந்தார். முன்னதாக பெங்களூருவில் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் மற்றும் ‘பாரத் கவுரவ் காசி தர்ஷன்’ ரெயில்களை கொடியசைப்பதற்காக கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா (கேஎஸ்ஆர்) நிலையத்துக்கு அவர் சென்று கொண்டிருந்த போது பிரதமர் நரேந்திர மோடி தனது காரை நிறுத்திவிட்டு, 'விதான் சவுதா'விற்கு அருகில் உள்ள கர்நாடகா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அலுவலகம் மற்றும் பெங்களூருவில் உள்ள ஒரு முக்கிய போக்குவரத்து சந்திப்பில் கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை நோக்கி கை அசைத்தார். பின் கே.எஸ்.ஆர் ரயில் நிலையம் அருகே உள்ள முக்கிய போக்குவரத்துச் சந்திப்பில் வாகனத்தில் இருந்து இறங்கி, அனைத்துப் பக்கங்களிலும் கூடியிருந்த கூட்டத்தை நோக்கி நடந்து சென்றார்.
காந்தி கிராம பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் கடந்த 2018 முதல் படித்த சுமார் 2 ஆயிரத்து 200 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இந்த விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று இசைஞானி இளையராஜாவிற்கு கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார். இசைத்துறையில் இளையராஜா ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு இந்த கவுரவ பட்டம் வழங்கப்பட்டது.
இந்திய சினிமாவில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ள இசைஞானி இளையராஜா இந்தியாவின் உயரிய விருதான பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
வட இந்திய இசைக்கலைஞர்களுடன் ஜுகல்பந்தி என்ற நிகழ்ச்சியை நடத்தியவர் மற்றும் மிருதங்க இசையில் பல புதுமைகளை புகுத்திய உமையாள்புரம் சிவராமன் அவர்களுக்கும் பிரதமர் மோடி டாக்டர் பட்டம் வழங்குகினார்.
#WATCH | Prime Minister Narendra Modi presents an honorary doctorate to music maestro Ilayaraja at the 36th Convocation Ceremony of Gandhigram Rural Institute, Dindigul.
— ANI (@ANI) November 11, 2022
Chief Minister MK Stalin, Governor RN Ravi, and others present at the ceremony. pic.twitter.com/WLtVYpuA4n
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்திலும், அந்த பகுதி முழுவதிலும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் காந்தி கிராம பல்கலைகழகத்திற்கு வருகை தந்ததால் மதுரை முதல் திண்டுக்கல் வரையிலும், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.