மேலும் அறிய

சட்டப்பேரவை நூற்றாண்டு விழா: குடியரசு தலைவர் வருகையால் சென்னையில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார். மேலும், சட்டப்பேரவையில் கருணாநிதியின் உருவப்படத்தையும் திறந்து வைக்கிறார்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு சென்னை மாகாணமாக இருந்தபோது, 1921ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது. இதன்படி, சென்னை சட்டப்பேரவை உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நடப்பாண்டில் சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட எண்ணிய முதல்வர், கடந்த மாதம் டெல்லி சென்றபோது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அழைப்பு விடுத்தார். அவர் ஒதுக்கிய தேதியின் அடிப்படையில், ஆகஸ்டு 2-ந் தேதி(இன்று) சட்டப்பேரவை நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்பு, முறைப்படி அதற்கான அழைப்பிதழை டெல்லி சென்று குடியரசுத் தலைவரிடம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் வழங்கினார்.

சட்டப்பேரவை நூற்றாண்டு விழா: குடியரசு தலைவர் வருகையால் சென்னையில் பலத்த பாதுகாப்பு!

இதையடுத்து, சட்டப்பேரவை நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து இன்று காலை புறப்படும் அவர் விமானம் மூலம் மதியம் 12.45 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவேற்க உள்ளனர்.

விமானநிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்கிறார். அங்கு மதிய உணவுக்கு பிறகு அவர் சிறிதுநேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர், 4.35 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படும் குடியரசுத் தலைவர், தலைமைச் செயலகத்திற்கு வருகிறார். மாலை 5 மணியளவில் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா தொடங்க உள்ளது.

சட்டப்பேரவை நூற்றாண்டு விழா: குடியரசு தலைவர் வருகையால் சென்னையில் பலத்த பாதுகாப்பு!

இந்த விழாவின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 முறை தமிழ்நாட்டின் முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்த மறைந்த முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளார். பின்னர், குடியரசுத் தலைவர் சிறப்பு உரையாற்ற உள்ளார். கருணாநிதியின் உருவப்படம் பேரவைத் தலைவர் இருக்கையின் இடதுபுறம் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வரிசையில் பின்புறம்  கருணாநிதியின் படம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர், பேரவைத் தலைவர், பேரவை துணைத்தலைவர், நீதிபதிகள், அரசியல் கட்சித்தலைவர்கள், எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு தலைமைச் செயலக கட்டிடம், புனித ஜார்ஜ் கோட்டை நுழைவுவாயில், கொத்தளப்பகுதி, போர்நினைவுச்சின்னம் வரை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை நூற்றாண்டு விழா: குடியரசு தலைவர் வருகையால் சென்னையில் பலத்த பாதுகாப்பு!

குடியரசுத்தலைவர் வருகையை முன்னிட்டு, தலைமை செயலகத்திற்குள் நேற்று மாலை முதல் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. தலைமைச் செயலக அதிகாரிகள் இன்று பகல் 1 மணிக்குள் பணியை முடித்துச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். விழாவிற்கான பாதுகாப்பு மற்றும் ஒத்திகை நிகழ்வுகள் நேற்று நடைபெற்றது. மேலும், குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று விழா நிறைவு பெற்ற பிறகு, குடியரசுத் தலைவர் கோவை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்!  அதிரடி காட்டிய டிஐஜி
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்! அதிரடி காட்டிய டிஐஜி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்!  அதிரடி காட்டிய டிஐஜி
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்! அதிரடி காட்டிய டிஐஜி
”திமுகவிற்கு ஒரு எம்.எல்.ஏ, த.வெ.க.விற்கு ஒரு முன்னாள் அமைச்சர் பார்சல்” 2026க்கு குறி..!
”திமுக, த.வெ.க-வில் இணையும் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்” யார், யார்?
Jayakumar Teases OPS: கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
"அப்பா எல்லாம் வீண் விளம்பரம்" கோவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்
மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.