மேலும் அறிய

Rajya Sabha MP Paveen Chakravarty : போட்டியின்றி வெற்றி.! எம்.பியானார் பிரவீன் சக்கரவர்த்தி- அதிகரித்தது காங்கிரஸ் பலம்

Rajya Sabha MP Paveen Chakravarty: மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட பிரவீன் சக்கரவர்த்தி, தவெக உதவியோடு மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

மாநிலங்களவை தேர்தல்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்  அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் வெற்றிபெற்றார்.  இதையடுத்து அவர் ஏற்கெனவே வகித்துவந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.  இதன் காரணமாக காலியாக இருந்த மாநிலங்களை இடத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தவெக அந்த இடத்தில் போட்டியிட்டு தனது முதல் எம்பியை டெல்லிக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை எம்பி பதவியை ஒதுக்கியது. இதனையடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் ராகுல் காந்தியின் நண்பரான பிரவீன் சக்கரவர்த்தி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

பிரவீன் சக்கரவர்த்தி போட்டி

இதைத்தொடர்ந்து, இந்த காலியிடத்துக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 1ம் தேதி தொடங்கி 8ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இத்தேர்தலில் போட்டியிட தவெக ஆதரவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்ரவர்த்தி மற்றும் 12 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 13 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இதில் அதிமுக, திமுக ஆகிய கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கவில்லை. இதனையடுத்து  சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழியாத 12 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. 

போட்டியின்றி பிரவீன் சக்கரவர்த்தி தேர்வு

இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் முடிந்த பிறகு, காங்கிரஸ் வேட்பாளர்  பிரவீன் சக்ரவர்த்தி   போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தேன் மொழி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார். 

இதனைத் தொடர்ந்து பேசி அவர், முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், நாடாளுமன்றத்தில் கூட்டணியின் குரலாக என குரல் இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட மாநில உரிமைகளுக்கு எதிரான மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பேன் என்று தெரிவித்தார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget