மேலும் அறிய

EPS: சர்வர் பழுது; பயிர்காப்பீடு பதிவுக்கான கால அவகாசம் நீட்டிக்கவேண்டும் - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!

EPS: டந்த சில நாட்களாக பெய்யும் பருவ மழையின் காரணமாக இணைய சேவை சரிவர கிடைக்காததால் எந்த விண்ணப்பங்களையும் உள்ளீடு செய்ய இயலவில்லை.

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெற்பயிர் காப்பீடு செய்ய இன்று (15.11.2023) கடைசி நாளாகும். எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளால் வரும் பயிர் மகசூல் இழப்பிலிருந்து காத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்போடு புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 

கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் கடன் பெறும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக பதிவு செய்ய இயலும். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்ய இன்று கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயிர் காப்பீடு செய்ய இயலவில்லை.

கடந்த குறுவை பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்யப்படாத நிலையில் தற்போது சம்பா, தாளடி பயிர்கள் காப்பீடு செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.ஆனால், பல்வேறு காரணங்களால் இம்முறை பயிர் காப்பீடு செய்யப்படும் இணையதளம் சர்வர் பிரச்சினை ஏற்பட்டு காப்பீடு செய்ய இயலாத நிலை உருவானது. விவசாயிகளும் நவம்பர் முதல் வாரம் வரை பயிர் காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விவசாயிகள் பயிர் காப்பீடு ப்ரிமீயம் தொகை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு அரசு எவ்வித தீர்வு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி X தளத்தில் (Formerly Known as Twitter) வெளியிட்டுள்ள பதிவில், “ இந்த ஆண்டு காவிரியில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், டெல்டா விவசாயிகள் ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் சம்பா சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இழப்பீடு பெற விவசாயிகள் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் அதற்குரிய சான்றிதழ் பெற்று இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்யும் பருவ மழையின் காரணமாக இணைய சேவை சரிவர கிடைக்காததால் எந்த விண்ணப்பங்களையும் உள்ளீடு செய்ய இயலாமல் விவசாயிகளும், இ-சேவை மைய ஊழியர்களும் தவித்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து விவசாயிகளும், விவசாய சங்கங்களும் கால நீட்டிப்பு செய்யும் கோரிக்கையினை எழுப்பியும், திமுக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கடுங்கோபத்தில் உள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை

பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு குறித்து அவரின் பதிவில்,”  இந்நிலையில் பயிர் காப்பீடு செய்ய இன்றேகடைசிநாள் என்ற நிலையில் இணைய வழி சேவை எப்பொழுது சீராகும் என்பது தெரியாத நிலையில், விவசாயிகளும், இ-சேவை மைய ஊழியர்களும் பயிர் காப்பீடு விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். எனவே, உடனடியாக விடியா அரசின் முதலமைச்சர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கடைசி தேதியை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வலியுறுத்துகிறேன்.” என்று தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget