மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
மகாகவி மாற்றுத்திறனாளிகள் சமூக நல அறக்கட்டளை மற்றும் மாற்றுத்திறனாளி சமூக நீதி இயக்கம் இணைந்து நடத்திய இந்த பொங்கல் விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நல சங்க அலுவலகம் முன்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான பொங்கல் விளையாட்டு போட்டி நிர்வாக இயக்குனர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. மகாகவி மாற்றுத்திறனாளிகள் சமூக நல அறக்கட்டளை மற்றும் மாற்றுத்திறனாளி சமூக நீதி இயக்கம் இணைந்து நடத்திய இந்த பொங்கல் விழாவில், அலுவலகம் முன்பு பொங்கல் பானை வைத்து பொங்கல் வைத்தனர். அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இதில் பாட்டிலில் நீர் நிரப்புதல், பொரி சாப்பிடும் போட்டி,பெரிய அளவிலான பலூன் ஊதுதல், மியூசிக் பால், நடைபோட்டி, 3 வீலர் ஸ்கூட்டரை மெதுவாக இயக்குவது உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

