மேலும் அறிய

தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!

புதுச்சேரியில் மதுக்கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே டோர் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் மதுக்கடைகள் மூடியிருப்பதால், மதுப்பிரியர்கள் மது குடிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய   ஊரடங்கு அமலில் இருந்தது. தொற்று பாதிப்பு  குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அளித்திருக்கிறது. அதன்படி 44 நாட்களாக திறக்கப்படாத மதுபான கடைகள் திறக்கப்பட்டு காலை 9 மணி முதல் மாலை 5 மணி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மதுபான பார்கள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரி காவல்துறை ஆணையர் சுதாகர் தலைமையில்  மதுக்கடை உரிமையாளர்களுடன் மதுக்கடைகளை திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!

அதில், மதுபான கடைகளில் மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். மது வாங்க வருவோர் மற்றும் மதுக்கடை ஊழியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மது வாங்க வருபவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்வதுடன், அவர்களுக்கு கிருமி நாசினியும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபான கடைகளில் கூட்ட நெரிசலை தடுக்க வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே டோர் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மட்டும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆன்லைன் செயலி மூலமும், போன் மூலமும் வாடிக்கையாளர்களுக்கு மதுக்கடை உரிமையாளர்கள் டோர் டெலிவரி செய்வதற்கான பணிகளை துவங்கியுள்ளனர். கலால்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு மதுபானக் கடைகள் இந்த முறையை கடைப்பிடிக்கலாம் என்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மட்டும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மது கிடைக்காமல் சானிடைசர் குடித்து ஒருவர் புதுச்சேரியில் அரசு மருத்துவமனையில் இறந்துவிட்டார். இதனைக் கேட்டு மனமுடைந்த எம்எல்ஏ ஜான்குமார் மதுக்கடைகளைத் திறக்க ஆளுநர் தமிழிசையிடம் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!
இதேபோல் டெல்லி சுங்கவிதிகள் 2021ன்படி, எல்-13, எல்-14 உரிமம் வைத்துள்ள மதுக்கடை உரிமையாளர்கள் மட்டும் மொபைல் செயலி, இணையதளம் மூலம் பெறும் ஆர்டர்களை வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சென்று சப்ளை செய்யலாம் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவின் பரவல் டெல்லியில் குறைந்ததை அடுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்க அரசு தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக கட்டுமானப் பணியாளர்கள், தொழிற்சாலைகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. 


தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!

இந்நிலையில் மதுபானங்களை வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யவும் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து டெல்லி அரசு வெளியிட்ட அறிவிப்பில், 'எல்-13 வகை உரிமம் வைத்திருக்கும் கடைக்காரர்கள் மட்டுமே மொபைல் செயலி அல்லது இணையதளம் வாயிலாக மதுபானங்களை ஆர்டர் பெற்றால் அவர்களின் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. பில் இல்லாமல் மது விற்பனை செய்யப்படும் தமிழகத்தில் டோர்டெலிவரிக்கு வாய்ப்பு குறைவு என்பதும், அண்டை மாநிலத்தில் கிடைத்துள்ள இந்த சலுகை தமிழ்நாட்டு குடிமகன்களுக்கு நிச்சயம் கடுப்பேத்தும் என்பதும் உண்மை. 

தலைப்பு செய்திகள்

இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai International Kite Festival: வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
Embed widget