மேலும் அறிய

அம்மா கூறிய ஆறுதல்! அவர் ஒரு குழந்தை! பாஜக கூட்டணி வாய் திறந்த அன்புமணி.. 

"சென்னை சோழிங்கநல்லூரில் பாமக சமூக ஊடக பேரவை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில் அன்புமணி ராமதாஸ் பேசிய தகவல்கள் வெளியாகி உள்ளன"

பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி சமூகஊடகப் பேரவை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். பாமகவின் உட்கட்சி மோதல் நிறைவேறும் நிலையில், சமூக ஊடகங்களில் ராமதாஸ் அணியினர் மற்றும் அன்புமணி அணியினர் என இரு தரப்பினராக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக பார்க்கப்படுகிறது. 

கூட்டத்தில் அன்புமணி பேசியது என்ன ?

கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: அடுத்த ராமதாஸ் பிறந்தநாள் முன்னிட்டு 25ஆம் தேதி முதல், 100 நாட்களுக்கு தொகுதிவாரியாக நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். இந்த நடைபயணத்தில் முக்கியமாக தமிழ்நாட்டு மக்களுக்கான 10 உரிமைகள் குறித்து நடைபயணம் நடைபெற உள்ளது. மேலும், உள்ளூர் பிரச்சனைகள் குறித்து நீங்கள் என்னிடம் தெரிவியுங்கள். தொகுதி வாரியாக இருக்கும் பிரச்சினை குறித்து அந்தந்த தொகுதிகளில், முக்கியத்துவம் குறித்து பேசப்படும் என தெரிவித்தார். 

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஐயா ஐயாவாக இல்லை. அய்யா (ராமதாஸ்) அய்யாவாக இருந்து எது சொல்லி இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு செய்திருப்பேன். யாரும் பாமக நிறுவனர் ராமதாசை விமர்சனம் செய்யக்கூடாது என தெரிவித்தார்.

12 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பாமகவின் தலைவராக இருக்குமாறு ராமதாஸ் கூறினார். அவருக்கு பிறகுதான் நான் தலைவராக வேண்டுமென நான் அப்போதே முடிவெடுத்து விட்டேன். அதனால்தான் இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தேன். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ராமதாஸ் அவராகவே இல்லை. ஒரு மகனாகவும், மருத்துவராகவும் சொல்கிறேன் அவர் இப்போது குழந்தை போல் இருக்கிறார் என பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அவருடன் இருக்கும் மூன்று பேர் தங்கள் சுய லாபத்திற்காக, அதை பயன்படுத்திக் கொள்கின்றனர். அது தெரிந்த பிறகு தான் நான் தலைவராவதற்கு ஒப்புக்கொண்டேன். யாரும் சமூக ஊடகங்களில் ராமதாசை விமர்சனம் செய்யக்கூடாது என ஊடகப் பேரவை நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் கட்டளையிட்டார்.

கூட்டணி குறித்து அன்புமணி பேசியது என்ன ?

பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை பேசியபோது மூன்று முறை ராமதாஸிடம் பேசினேன். அப்போதெல்லாம் பாஜகவுடன் கூட்டணி பேசு என்று தான் கூறினார். அதன் பிறகு திடீரென சிவி சண்முகத்துடன் சந்திப்பு நடைபெற்றது. அதன் பிறகும் அது குறித்து அவரிடம் கேட்டேன். பத்திரிக்கை வைக்க வந்ததாகவே கூறினார். சி.வி. சண்முகத்துடன் அப்போது பேச்சுவார்த்தை நடைபெற்றதற்கு காரணம் அங்கிருந்த விஷ கிருமிகள் தான் காரணம். அதிமுகவுடன் கூட்டணி பேசு என்று கூறினாலும் பேசி இருப்பேன். பாஜக விடும் கூட்டணி குறித்து மூன்று மாதங்கள் பேச்சுவார்த்தை நடந்தது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

ராமதாசி இயக்கும் தீய சக்தி ?

திமுக தான் முதல் எதிரி, மருத்துவர் ராமதாஸ் குழந்தை மாதிரி. அவரை தீய சக்தி ஒன்று இயக்கிக் கொண்டிருக்கிறது. சமூக ஊடகங்களில் ராமதாஸ் பற்றி தவறாக போடக்கூடாது என ஊடகப் பேரவினருக்கு கட்டளை என தெரிவித்தார். செல்வப்பெருந்தகை மற்றும் திருமாவளவன் ஆகிய இருவருக்கும் திடீரென ராமதாஸ் மீது ஏன் பாசம் என கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அம்மாவிடம் பேசினேன் 

அறுபதாவது திருமண நாள் விழாவின்போது தொலைபேசியில் கூற நான் பேசவில்லை என ராமதாஸ் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், அம்மாவிடம் திருமண நாள் அன்று பேசினேன். தொடர்ந்து அம்மாவிடம் வர முடியாத சூழல் குறித்து எடுத்துக் கூறினேன்.‌ அப்போது அம்மா எனக்கு ஆறுதல் கூறினார்கள். நான் தொலைபேசியில் கூட பேசவில்லை என்று கூறுவது உண்மை இல்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
பருவமழைக்கு விழுந்த முட்டுக்கட்டை! வங்கக்கடலில் குறையும் ஈரப்பதம்: எல் நினோ ஆதிக்கத்தின் முதல் அறிகுறியா?
பருவமழைக்கு விழுந்த முட்டுக்கட்டை! வங்கக்கடலில் குறையும் ஈரப்பதம்: எல் நினோ ஆதிக்கத்தின் முதல் அறிகுறியா?
ஆன்மிகத்தில் அர்ச்சனா கல்பாத்திக்கு என்ன வேலை? - விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
ஆன்மிகத்தில் அர்ச்சனா கல்பாத்திக்கு என்ன வேலை? - விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget