PM Modi Chennai Visit Schedule: நாளை தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி... திட்டங்கள் என்னென்ன..?
PM Narendra Modi Chennai Visit Schedule: நாளை தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திரமோடி சென்னையில் நடைபெறும் விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க இருக்கிறார்.
PM Modi Chennai Visit Schedule: நாளை தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திரமோடி சென்னையில் நடைபெறும் விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க இருக்கிறார். அதன்படி, நாளை மாலை 5.30 மணிக்கு ஹைதரபாத்தில் இருந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் அடையாறு சென்று, அங்கிருந்து கார் மூலம் விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டரங்கம் வருகிறார்.
பிரதமர் மோடி நாளை தொடங்கும் திட்டங்கள் என்னென்ன..?
- மதுரை – தேனி அகல ரயில் பாதை
- தாம்பரம் – செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதை
- எண்ணூர் – செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் – பெங்களூரு இடையே குழாய் வழியே இயற்கை எரிவாயு திட்டம்
- லைட் ஹவுஸ் திட்டத்தில் கட்டப்பட்ட1,152 வீடுகள் திறப்பு
அடிக்கல் நாட்டும் திட்டம் :
- 14 ஆயிரத்து 870 கோடி செலவில் பெங்களூரு - சென்னை இடையே 262 கி.மீ. நீளத்தில் அமைக்கப்படவுள்ள விரைவுச் சாலை திட்டம்
- சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே இரட்டை அடுக்கு கொண்ட 4 வழி உயர்மட்ட சாலை திட்டம்
- நெரலூரு - தருமபுரி பகுதியில் 4 வழி நெடுஞ்சாலை
- மீன்சுருட்டி - சிதம்பரம் பகுதியில் 2 வழி நெடுஞ்சாலை
- சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில்வே நிலையங்களை மறுசீரமைக்கும் பணி
- சரக்கு போக்குவரத்தை வேகப்படுத்தும் வகையில் சென்னையில் அமைக்கப்படவுள்ள ’மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க்’ திட்டம்
இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடியோடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ஏற்கனவே, டெல்லி சென்று பிரதமரை சந்தித்தப்போது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், ஆளுநர் நீட் விலக்கு சட்ட முன் வடிவை மத்திய அரசுக்கு அனுப்பியிருப்பதை குறிப்பிட்டு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்