Pigeon Race : சேலத்தின் புகழ்பெற்ற விளையாட்டான புறா பந்தயம்: எப்படி விளையாடப்படுகிறது தெரியுமா?
புறா பந்தயம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான விளையாட்டு. தென் மாநிலத்தில் சுமார் 40 கிளப்புகள் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான பயன்பாடுகளைப் பயன்படுத்தி, தமிழகம் முழுவதும் புறா பந்தயங்களை நடத்துகின்றன என்று ’தெலுங்கானா டுடே’ தெரிவித்துள்ளது.
புறா பந்தயம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான விளையாட்டு. தென் மாநிலத்தில் சுமார் 40 கிளப்புகள் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான பயன்பாடுகளைப் பயன்படுத்தி, தமிழகம் முழுவதும் புறா பந்தயங்களை நடத்துகின்றன என்று ’தெலுங்கானா டுடே’ தெரிவித்துள்ளது.
அதேபோல் தமிழகத்தின் சேலம் மாவட்டம் முழுவதும் புறாக்கள் வளர்க்கப்படுகின்றன. தூத்துக்குடி, மதுரை, திருச்சி, நாகர்கோவில், திண்டுக்கல், ராமநாதபுரம், கோயம்புத்தூர், கீழக்கரை மற்றும் பாம்பன் ஆகிய இடங்களிலும் இவ்விளையாட்டு பிரபலமாக உள்ளது.
ஹோமர் புறா மட்டுமே இப்பந்தயத்திற்கு ஏற்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பறவைகள் புறாக்களின் இனமாகும். இவை நீண்ட தூரத்திலிருந்து தங்கள் வீடுகளுக்கு பறக்கக்கூடியவை. பந்தயத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புறாக்களுக்கு மூன்று மாதம் இருக்கும்போது பயிற்சி தொடங்கப்படுகிறது. அவர்களின் சோதனை ஓட்டங்கள் இரண்டு கிலோமீட்டர்கள் முதல் 70 கிலோமீட்டர்கள் வரையுள்ளது.
மேலும், ஆண் மற்றும் பெண் பந்தய புறாக்கள் தனித்தனியாக வளர்க்கப்படுகின்றன. இந்தப் புறாக்களுக்கு கம்பு, சோளம் உள்ளிட்ட 20 வகையான சிறுதானியங்கள் அளிக்கப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவு புறாக்களுக்கு சக்தியும் உடல்வலுவும் அளிக்கிறது.
ஒவ்வொரு புறாவும் பிறந்த ஐந்தாவது நாளில் அதன் காலில் ஓர் வட்ட வடிவ வளையத்தை கிளப்கள் இடுகின்றன. புறாவின் காலில் உள்ள இந்த மோதிரத்தில் கிளப் பெயர், ஆண்டு மற்றும் பதிவு எண் உள்ளது. இந்த மோதிரம் அதன் வாழ்நாள் முழுவதும் புறாவுடனேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புறா பந்தயத்தின் பிரபலத்தை தனுஷ் நடித்த பிரபல தமிழ் திரைப்படமான மாரி (2015) இல் காட்சிப்படுத்தியதன் மூலம் அளவிட முடியும்
புறா பந்தயங்கள் அடிப்படையில் பல பயிற்சி பெற்ற புறாக்களின் திறனை சோதிக்கின்றன. குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் பறக்கும் அதிக வேகம் கொண்ட பறவை வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமே இப்புறா பந்தயம் நடப்பதல்ல . மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவிலும் இது பிரபலமானதே. கொல்கத்தா புறா பந்தயக் கிளப் தான் இந்தியாவின் பழமையான புறா பந்தயக் கிளப் ஆகும்.
ஹோமர் புறா பந்தயம் சிறப்பு :
* புறாக்களில் வேகமாக மற்றும் அதிக தூரம் பறக்கும் திறமை ஹோமர் புறாக்களுக்கு உண்டு
* இவற்றின் முக அமைப்பு அலகின் நுனியில் இருந்து தலை வரை நேர் கோடு போல் சமமாக இருக்கும்
* இதன் கண்களின் நிறம் சிகப்பு , பழுப்பு , வெள்ளை ,மஞ்சள் ஆகியவை கலந்து இருக்கும்
* இதன் கண்ணின் நிற அமைப்பை வைத்து அதன் திறமையை கணக்கிடுவர்
* ஒவ்வொரு ஊரிலும் இதற்கான கிளப் கள் இருக்கும்
* இவ்வகை புறாக்கள் குஞ்சு பருவத்தில் இருக்கும்போதே உரிமையாளர் பெயர் பொறித்த வளையமும் அந்த கிளப் ன் வளையமும் அதன் கால்களில் மாட்டி விடபடுகின்றன
* அது பறக்க ஆரம்பிக்கும்போது (இந்த பருவத்தை பட்டா என்பார்கள் ) முதலில் வீட்டின் அருகில் இருந்து பறக்க விடுவார்கள் அது தன் கூட்டை வந்தடையும்
* பின்பு நாட்கள் செல்ல செல்ல படிப்படியாக தூரத்தை அதிகப்படுத்தி பயிற்ச்சி கொடுப்பார்கள்
* இப்படியே 10km , 20km , 50km ,100km, 250km என பயிற்ச்சி கொடுப்பார்கள்
* பிறகு பந்தயத்திற்கு தயாராண புறாக்களை பந்தயத்தின் பொழுது கிளப் ல் ஒப்படைப்பார்கள்
* அதன் கால்களில் கிளப் ல் இருந்து பேண்டு அணிவிக்கபடும் அதன் உள் பகுதியில் ரகசிய எண் பொறிக்கப்பட்டிறுக்கும்
* பிறகு அந்த புறாக்களை பந்தய தூரத்திற்கு தகுந்த ஊர்களில் சென்று பறக்கவிட்டு விடுவார்கள்
* அந்த புறாக்கள் அங்கிருந்து வளர்த்தவர்வீட்டு கூண்டிற்கு வந்தடையும் புறாவின் உரிமையாளர் அதன் காலில் உள்ள பேண்டில் இருக்கும் இரகசிய எண்ணை கிளப்பிற்கு சொல்ல வேண்டும்
* அந்த நேரத்தை வைத்து எந்த புறா முதலில் வந்ததோ அதை வைத்து பரிசுகள் வழங்கப்படும்.