மேலும் அறிய

Murasoli : எடப்பாடியை விட ஓபிஎஸ் மேலானவர்; அதிமுக அலுவலகம் வர அவருக்கு உரிமை உள்ளது.. முரசொலி கட்டுரை!

பழனிசாமியின் விமர்சனத்திற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் இன்று பதிலடி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையே, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் பழனிசாமி, முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் மூத்த தலைவருமான பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

Murasoli : எடப்பாடியை விட ஓபிஎஸ் மேலானவர்; அதிமுக அலுவலகம் வர அவருக்கு உரிமை உள்ளது.. முரசொலி கட்டுரை!

இச்சூழலில், பதற்றத்தை குறைக்கும் வகையில் அதிமுக தலைமை அலுவலகம் நேற்று மூடப்பட்டது. இதற்கு திமுகவை பழனிசாமி கடுமையாக சாடியிருந்தார். இந்நிலையில், பழனிசாமியின் விமர்சனத்திற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் இன்று பதிலடி வழங்கப்பட்டுள்ளது. இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவான வகையில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

பழனிசாமியை விட பன்னீர்செல்வத்திற்கு தலைமை அலுவலகத்தில் நுழைய அதிக அதிகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற சம்பவம் குறித்து விரிவாக விவரித்துள்ள முரசொலி, "அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் சமூக விரோதிகள் நுழையக் கூடும் எனக் காவல் துறையிடம் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தோம்.

இருந்தும் உரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் காவல்துறை மீது புகார் கூறியுள்ளார். இதிலே நமக்குப் புரியாத புதிர்; பழனிச்சாமி என்ன சொல்ல வருகிறார் என்பதுதான். பழனிச்சாமி கோஷ்டியின் சார்பில் சமூக விரோதிகள் அ.தி.மு.க. அலுவலகத்தில் நுழையக் கூடும் என்பதுதான்! ஆனால் ஜூலை 11 ஆம் தேதி காலை அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் நுழைந்தது ஓ. பன்னீர் செல்வம் கோஷ்டி.

Murasoli : எடப்பாடியை விட ஓபிஎஸ் மேலானவர்; அதிமுக அலுவலகம் வர அவருக்கு உரிமை உள்ளது.. முரசொலி கட்டுரை!

எடப்பாடி பார்வையில் ஓ.பன்னீர் செல்வம் சமூக விரோதியாகத் தெரியலாம்; ஆனால் காவல் துறைப் பார்வையில், அவர் ஒரு முன்னாள் துணை முதல்வர் மட்டுமல்ல; எடப்பாடி போல முதலமைச்சராக சில காலம் இருந்தவர். அதுமட்டுமல்ல; அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் அவர் வந்த காலக்கட்டத்தில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்!

அதாவது கட்சியில் எடப்பாடிக்கு மேலான அதிகாரத்தில் இருப்பவர் ! ஜூலை 11 பொதுக்குழுவுக்கு முன் நடந்த அந்தக் கட்சியின் பொதுக்குழு முடிவுப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டது என்று எடுத்துக் கொண்டாலும், அவர்களது மற்றொரு கூற்றுப்படி, பன்னீர் செல்வம் அந்தக் கட்சியின் பொருளாளர்! எந்த விதத்தில் பார்த்தாலும் பழனிச்சாமி, அந்தக் கட்சியில் ஏற்றுள்ள பதவியைவிட பெரிய பதவி பன்னீருடையது! அவருக்கு அந்த அலுவலகத்திற்குள் வர எல்லா உரிமையும் உள்ளது.

நிலைமை அப்படி இருக்க, ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளரோ அல்லது பொருளாளரோ, மற்றும் அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர், அந்தக் கட்சியின் அலுவலகத்திற்குள் செல்வதை எப்படிக் காவல்துறை தடுத்து நிறுத்த முடியும் ?

சராசரி அறிவு படைத்தவனுக்குக் கூட புரியும் இந்த விவகாரம். நான்கு ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி புரிந்தது மட்டுமின்றி - காவல் துறையை தன்னிடம் வைத்திருந்த முன்னாள் மாண்புமிகுவுக்குத் தெரியாது போனது எப்படி ?

உள்கட்சி விவகாரங்களை நீதிமன்றத்திற்குக் கொண்டு வராதீர்கள்; நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள்; என்று நீதிமன்றமே கூறிவிட்ட நிலையில்: காவல் துறை அதனுள் தலையிட முடியுமா ? உள்கட்சி விவகாரங்கள் எல்லை மீறி சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக மாறிய நிலையில்தான் காவல் துறை தலையிட்டுள்ளது!

Murasoli : எடப்பாடியை விட ஓபிஎஸ் மேலானவர்; அதிமுக அலுவலகம் வர அவருக்கு உரிமை உள்ளது.. முரசொலி கட்டுரை!

கழக அரசின் காவல் துறை, இந்த விவகாரத்தில் எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலையோடு செயல்பட்டுள்ளது! பழனிச்சாமி கூட்டம் பாராட்ட வேண்டாம்; பழி சுமத்துவதை நிறுத்தட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
மூவர்ணத்தில் ஜொலித்த வங்கக்கடல்! 20 நாட்டிகல் மைல் தூரம் கடலுக்குள் சென்று போலீசார் நடத்திய பிரம்மாண்ட பேரணி!
மூவர்ணத்தில் ஜொலித்த வங்கக்கடல்! 20 நாட்டிகல் மைல் தூரம் கடலுக்குள் சென்று போலீசார் நடத்திய பிரம்மாண்ட பேரணி!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
Embed widget