நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி
கரூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிக்கன நடவடிக்கையாக கீழ்பவானி பாசன விவசாயிகளுக்கு முறைநீர் பாசனத்தை அமுல்படுத்தி வருகிறார்கள் அதனை வரவேற்கிறோம்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பு கள்ளுக்கு தடையை நீக்காவிட்டால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கரூரில் பேட்டியளித்துள்ளார்.
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கரூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சிக்கன நடவடிக்கையாக கீழ்பவானி பாசன விவசாயிகளுக்கு முறைநீர் பாசனத்தை அமுல்படுத்தி வருகிறார்கள் அதனை வரவேற்கிறோம். அறுவடை முடியும் வரை இந்த திட்டத்தை தொடர வேண்டும். இதனை நம்பியுள்ள 1 லட்சத்து 5 ஆயிரத்து 100 ஏக்கர் பாசனத்திற்கு தண்ணீர் செல்லவில்லை. இந்த சிக்கன நடவடிக்கைகள் மூலம் ஜனவரி மாதம் வரை தண்ணீர் திறக்க வேண்டும். 1958ம் ஆண்டு முதல் கீழ்பவானி பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் திறப்பில் எந்த விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. விவசாயிகளுக்குள் சண்டையை ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதே நிலை நீடித்தால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் திமுக வெற்றி வாய்ப்பை இழக்கும். 5 மாநில தேர்தலில் இலவசங்களை அரசியல் கட்சிகள் அள்ளி வீசி வருகின்றனர். ஆட்சியை பிடிக்கவும், ஆட்சியாளர்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், இது போன்ற இலவச வாக்குறுதிகளை சொல்லி ஓட்டு கேட்கின்றனர். இது போன்ற வாக்குறுதிகளும் லஞ்சம் தான். இதனை தடுக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும். ஏரி, குளம், கண்மாய் வரக்கூடிய நீர்வழிப்பாதை இலவச வீட்டுமனைப்பட்டாக்களாக கொடுக்கப்பட்டு விட்டதால் மழைநீர் செல்ல வழியின்றி ஆறுகளுக்கு சென்று, வீணாக கடலில் கலக்கிறது.
இதனை தடுக்க நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும், இல்லை என்றால் பாலைவனமாக விவசாய நிலங்கள் மாறும். தமிழகம் பட்டாசு விற்பனை 300 கோடியை தாண்டியது என்கிறார்கள், அதை விட டாஸ்மாக் விற்பனை அதிகம் என்கிறார்கள். மதுவிற்பனை மூலம் அரசுக்கு வருமானம், என்பது தலைகுணிவே. பட்டாசு மாசு காரணமாக சென்னையில் 300 தாண்டியது என்கிறார்கள். பூமி பந்து சூடாகி கொண்டிருக்கிறது என்கிறார்கள். இது போன்ற மாசுக்களால் நோயின்றி வாழ முடியாது. டிசம்பர் 7ம் தேதி ஈரோட்டில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் காவிரி நீர் பங்கீடு, கள்ளுக்கு தடை என்பது குறித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பு கள்ளுக்கு தடையை நீக்காவிட்டால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்” என்றார்.