பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல் செய்யப்படும்.. இன்று முதல் அமல்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!
தமிழகம் முழுவதும் இருக்கும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே கொள்முதல் செய்யப்படு என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இருக்கும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே கொள்முதல் செய்யப்படு என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல் செய்யப்படுவதால் அதிகப்படியான விவசாயிகள் பலன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு வியாபாரிகள் நெல் கொடுப்பதை தவிர்க்க பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெல் கொள்முதல் செய்யப்படும் விவசாயிகளுக்கு உடனே பண விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை கொடுக்கும் விவசாயிகளிடம் மூட்டைக்கு கூடுதலாக பணம் வசூல் செய்யும் வியாபாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் மண்டலம் நடப்பு கே. எம். எஸ் 2022-2023 பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு மூன்றாம் பருவம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
ஜூன். 1 முதல் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் தங்கள் நெல்லினை விற்பனைக்காக ஆன்-லைனில் பதிவு செய்யும் போது “பயோமெட்ரிக்" முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறை புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் கருவி பொருத்தி விரல்ரேகை பதிவு செய்வதன்மூலம் நெல் வியாபாரிகள் உள் நுழையாமல் தடுப்பதுடன் விவசாயிகள் மட்டும் பயன் பெறும் வகையில் நெல்லினை கால தாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்திட முடியும்
பயோமெட்ரிக் கருவி பொருத்தி விரல்ரேகை பதிவு செய்வதன் மூலமும், ஆதார் எண்ணில் பதிவு செய்திருக்கும் கைப்பேசி எண்ணிற்கு ஓ. டி. பி பெறுவதன் மூலமும், விவசாயிகளின் விபரத்தை துல்லியமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
இந்த விரல் ரேகை பதிவு மூலம் விவசாயிகளின் சுய விபரங்கள் சரியாக இருக்கிறதா என்று கொள்முதல் நிலையங்களிலேயே சரி பார்த்துக்கொண்டு நெல்லினை விற்பனை விவசாயிகள் செய்து கொள்ளலாம்" என கூறப்பட்டுள்ளது.