மேலும் அறிய

நிறுத்தப்பட்டது ஆக்சிஜன் உற்பத்தி: நாளை மூடப்படுகிறதா ஸ்டெர்லைட் ஆலை?

கடந்த ஏப்ரல் மாதம் முதல் 3 மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் செய்யப்பட்டு வந்த ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அளித்த அனுமதி நாளையுடன் முடியும் நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் நிறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் போதுமான ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆக்சிஜன் தயாரிப்பதற்காக தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதிக்க கோரி வேதாந்தா தாக்கல் செய்த மனுவில் இவ்வாறு கூறியிருந்து. 

கடந்த ஏப்ரல் மாதம் முதல் 3 மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடர அனுமதி கேட்டு வேதாந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் போதுமான ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

உச்சநீதிமன்றம் அளித்த அனுமதி நாளையுடன் முடியும் நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் நிறுத்தியுள்ளது. இதுவரை 2,132 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது ஆலையில் 134 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருப்பில் இருப்பதாகவும் ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மேலும், உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவின்படி ஆலையின் அடுத்தக்கட்ட செயல்பாடு அமையும் என்றும் கூறியுள்ளது.

2021 ஏப்ரல் மாத இறுதியில், ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தற்காலிக அனுமதி அளித்தது. ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு, ஆக்சிஜன் உற்பத்திக்கான ஆலையை மேற்பார்வையிடும் என்று நீதிமன்றம் அறிவித்தது.  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்  அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நிறுத்தப்பட்டது ஆக்சிஜன் உற்பத்தி: நாளை மூடப்படுகிறதா ஸ்டெர்லைட் ஆலை?

முன்னதாக, தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை உள்ளது, வேதாந்தாவின் ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்த தேவையில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதற்கு, பல்வேறு சமூக அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவத்தனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமுகச் செயற்பாட்டாளருமான நித்யானந்த் ஜெயராமன் இதுகுறித்து கூறுகையில், "ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்த தேவையில்லை எனக் கூறுவது அடிப்படையற்றது. ஏப்ரல் 23 அன்று, தமிழகத்தில் தினம்தோறும் 15,000 கேஸ் இருந்த நிலையில், அரசு உச்ச நீதி மன்றத்தில் உடனடியாக ஆக்சிஜன் தேவை இல்லை என நிலை எடுத்து. ஏப்ரல் மாதத்தில், வேதாந்தா செயல்பட அனுமதிக்கப்பட்டபோது, 2வது அலை அதிகரித்து கொண்டிருந்தது, O2 பற்றாக்குறை கடுமையாக மாறிக்கொண்டிருந்தது. இன்று, ஆக்ஸிஜன் கிடைக்கிறது, ஆனால் மின்சாரம் இல்லை. பல மாவட்டங்களில் தினசரி மின்வெட்டுக்களை எதிர்கொள்கின்றன. வேதாந்தா உற்பத்தி செய்யும் ஒவ்வொரு டன் ஆக்ஸிஜனுக்கும் 5600 யூனிட் மின்சாரத்தை  வீணாக்குகிறது. 700 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி 1 டன் O2 தயாரிக்க முடியும். ஆனால் வேதாந்தா 6300 யூனிட்களைப் பயன்படுத்துகிறது.

தினசரி சராசரியாக 30 டன் உற்பத்தி என அடிப்படையில், வேதாந்தா ஒரே நாளில் 168,000 யூனிட்களை வீணாக்குகிறது. இது ஒரு மாதத்திற்கு 1700 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க போதுமானது. வேதாந்தாவின் குறைந்த செயல்திறன் கொண்ட அலகு இயங்குவதில் அர்த்தமில்லை. உற்பத்தி இடைநிறுத்தப்பட வேண்டும். அலகு ஸ்டாண்ட்-பை முறையில் பராமரிக்கப்பட வேண்டும். அவசர நிலைமை ஏற்பட்டால், அதை மறுதொடக்கம் செய்வதை அரசாங்கம் பரிசீலிக்கலாம்” என்று கூறினார்.

ABP Desam: உதயமானது 'ஏபிபி தேசம்'

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget