பயம்... டம்மி ஆயிடுவாங்க... தீபாவளி துப்பாக்கி - ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ சரமாரியாக சாடிய ஓ.ராஜா
ஓபிஎஸ்-வும் சசிகலா தலைமையை ஏற்பார் என அவர் பேட்டியளித்திருந்த நிலையில், ஓ.ராஜா உள்ளிட்ட சசிகலாவை சந்தித்தவர்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், தேனி மாவட்ட அதிமுக பிரமுகருமான ஓ.ராஜா, நேற்று முன்தினம், சசிகலா தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும் என ஏபிபி நாடு இணையத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். இந்நிலையில், அவர் அறிவித்தபடி நேற்று திருச்செந்தூர் வந்த சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ஓபிஎஸ்-வும் சசிகலா தலைமையை ஏற்பார் என அவர் பேட்டியளித்திருந்த நிலையில், ஓ.ராஜா உள்ளிட்ட சசிகலாவை சந்தித்தவர்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளனர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும்.
இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கபப்ட்டிருப்பது குறித்து பேசி இருக்கும் ஓ. ராஜா, “இபிஎஸ், ஓபிஎஸ் சேர்ந்து கட்சியை என்ன டெவெலப் செய்திருக்கிறார்கள். கட்சி தரைமட்டத்திற்கு வந்துவிட்டது. தொண்டர்கள் அனைவரும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். சசிகலாவின் வருகையால்தான் கட்சியை காப்பாற்ற முடியும்” என பேசி இருக்கிறார்.
#BREAKING
— Raja Shanmugasundaram (@SRajaJourno) March 5, 2022
சசிகலா அதிமுக தலைமையை ஏற்க ஒபிஎஸ் தயாராக உள்ளார் என அவரது தம்பி ஒ.ராஜா 'ABP நாடு’ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கம்
தம்பியை நீக்க கையெழுத்திட்டார் அண்ணன் ஒபிஎஸ்@imanojprabakar | @abpnadu #ORaja #ADMK #Opaneerselvam pic.twitter.com/teoWF3QuVK
மேலும், இரட்டைக் குழல் துப்பாக்கியைப் போல ஓபிஎஸ், இபிஎஸ் செயல்பட்டு வருவதாக கூறுகிறார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “இரட்டை குழல் துப்பாக்கி இல்லை, அவர்கள் தீபாவளி துப்பாக்கி – சுருள் கேப் போட்டு சுட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதான். இவர்களது பஞ்சாயத்தை தீர்க்கவே நேரம் போதாது. இருவரும் தனிதனி குழு அமைத்து கட்சியை நடத்தி வருகின்றனர்.” என தெரிவித்திருக்கிறார்.
ஒன்றாக செயல்பட சசிகலா அழைப்பு விடுத்தும் ஏன் போக மறுக்கிறார்கள் என கேட்ட கேள்விக்கு “பயம் தான் காரணம். சசிகலா வந்தால் ஒபிஎஸ், இபிஎஸ் டம்மியாகிவிடுவார்கள். அதனால்தான் அவரை உள்ளே விடக்கூடாது என இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய ஓ.ராஜா “சசிகலா வருகை மட்டுமே அதிமுகவை காப்பாற்றும். தொண்டர்கள் இனியாவது சுதாரித்துக்கொண்டு இரட்டை தலைமை வேண்டாம் என்று சொல்ல வேண்டும். என்னை நீக்க இவர்களுக்கு தகுதியில்லை, இவர்கள் என்ன ஜெயலலிதாவா ?” என விளாசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்