Tamil Nadu ONGC: தமிழ்நாட்டில் மீண்டும் வருமா ஓஎன்ஜிசி? பரபரவென பரவிய தகவல்! விளக்கமளித்த அமைச்சர்!
தமிழ்நாட்டில் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்படாது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவுத்துள்ளார்
ONGC-க்கு அனுமதி இல்லை:
தமிழ்நாட்டில் எண்ணெய் கிணறு அமைக்க ONGC- க்கு அனுமதி வழங்கப்படாது என தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். எண்ணெய் கிணறு அமைப்பது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் ரத்தான நிலையில் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
”தமிழ்நாடு அரசு உறுதியாகவுள்ளது”:
இந்நிலையில் எண்ணெய் கிணறு அமைப்பது தொடர்பாக பேசிய அமைச்சர், மண்ணை பாழாக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும், அனுமதி வழங்க கூடாது என்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு, டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு, எண்ணெய் கிணறு அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காது.
”எந்த ரூபத்தில் வந்தாலும் அனுமதி இல்லை”:
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும், கருத்து கேட்பு கூட்டாமல நடத்தாமலும், தமிழ்நாட்டில் எங்கும் எண்ணெய் கிணறு அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காது. மேலும் ONGC நிறுவனமானது, ஹைட்ரோ கார்பன் , மீத்தேன் உள்ளிட்ட எந்த ரூபத்தில் வந்தாலும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
திருவாரூர் அருகே பெரியகுடியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப் போவதாக தகவல் வெளியான நிலையில், அனுமதி வழங்கப்படாது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்