Seeman: ”மன்னிப்பு கேளுங்க..இல்லைன்னா என்ன நடக்கும் தெரியுமா?” சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி!
சீமான் வரும் 24 ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா என்று நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சீமான் வரும் 24 ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா என்று நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சீமான் - விஜயலட்சுமி விவகாரம்:
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இந்த புகாரை 2012 ஆம் ஆண்டு திரும்பப் பெற்றார். அதே நேரம் காவல் துறை இந்த வழக்கை முழுமையாக முடிக்கவில்லை. இதனை எதிர்த்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார் சீமான்.
இவரது இந்த மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனிடையே இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் தரப்பில் சீமான் மன்னிப்பு தெரிவித்து கடிதம் சமர்பிக்க வேண்டும் என்றும் இதனை அவர் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது. அதேபோல், செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் அவர் மன்னிப்பு கடிதத்தை சமர்பிக்க வேண்டும் என்றும் கெடுவிதிக்கப்பட்டது.
வீடியோ வெளியீடு:
இந்த நிலையில் தான் நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த பொழுது நீதிபதி என்ன சொல்கிறார் என்பதை நான் வீடியோ காலில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நடிகை விஜயலட்சுமி எதிராக தொடரப்பட்ட வழக்குகளை அனைத்தையும் நாங்கள் வாபஸ் வாங்குகிறோம் வழுக்கை முடித்துக் கொடுங்கள் என்று கேட்டாங்க.. நீதிபதி ஏன் நீங்க சமரசமா போக மாட்டேங்கிறீங்க.. இதனை சீமான் தரப்பு வக்கீல் சொல்ல முடியாது.. இல்லையா நான் வந்து சமரசமா போறேன் என்று ஆர்டரை வாங்கினேன். ஆனால் வெளியில் சீமான் சமரசமாக போக மாட்டேன் என்று கூறுகிறார்.
மக்கள் குழம்ப வேண்டாம் என்பதற்காக நான் சொல்வது என்னவென்றால், 24 ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. கேக்கவில்லை என்றால் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்து மீண்டும் அந்த கலாட்டாதான் நடக்க போகிறது. நான் உண்மையைத் தான் சொல்லியிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.





















