
Saattai Duraimurugan: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் - சாட்டை துரைமுருகன்
NTK Saattai Duraimurugan: பேச்சு சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானதுதான், அதனை வரம்பு மீறி பயன்படுத்தக்கூடாது என நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகனுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

யூடியூபில் பணம் சம்பாதிக்க சாட்டை துரைமுருகன் வெறுப்புடன் பேசியிருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.மேலும், பேச்சு சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானதுதான், அதனை வரம்பு மீறி பயன்படுத்தக்கூடாது என நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகனுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வரம்பு மீறி பேசக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்த நிலையில், இனிமேல் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய அவதூறு கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் என சாட்டை துரைமுருகன் தெரிவித்தார்.
யூடியூபில் , அவதூறு கருத்துக்களை தெரிவித்து, வீடியோ வெளியிட்டுள்ளார் என நீதிமன்றம் தெரிவித்த நிலையில், இனி இதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வீடியோ வெளியிட மாட்டேன் என நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

