’ஆளுநர் உரையை கேட்க வந்தோம்; முதல்வர் உரையை அல்ல’ : வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்..
ஆளுநர் உரை என்பது அரசு செயல்படுத்திய திட்டம் குறித்து இடம்பெற்றிருக்கும் . இந்த ஆண்டு புதிய பெரிய திட்டம் எதுவும் இடம்பெறவில்லை என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.

ஆளுநர் உரை என்பது அரசு செயல்படுத்திய திட்டம் குறித்து இடம்பெற்றிருக்கும் . இந்த ஆண்டு புதிய பெரிய திட்டம் எதுவும் இடம்பெறவில்லை. தாங்களே தங்கள் முதுகை தட்டிக்கொடுத்து சபாஷ் போட்டுக்கொள்கின்றனர். ஆளுநர் உரை வெறும் வெற்று உரையே.
உரையில் எது இடம்பெற்றிருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. ஆளுநர் இருக்கும் போது முதல்வர் பேசுவது மரபை மீறிய செயலாகும். ஆளுநர் உரையை தான் கேட்க வந்தோம், முதல்வர் உரையை அல்ல என குறிப்பிட்டார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு என்பது அடியோடு சீரழிந்து விட்டது. கொலை, கொள்ளை, போதை பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. அப்படி ஒரு சீர்குலைவான ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து வருகிறது என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

