மேலும் அறிய

Jayalalitha: ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை: அப்போலோவுக்காக பரபரப்பு அறிக்கை வெளியிட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு

மருத்துவர் சந்தீப் சிங் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தத் தவறும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மருத்துவர் சந்தீப் சிங் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவக் குழு இது குறித்த மூன்று பக்க அறிக்கையை அளித்துள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது திராட்சை, இனிப்புகள், கேக் உள்ளிட்ட பொருள்களை உண்டார் எனவும், தைராய்டு, ரத்த சர்க்கரையின் அளவு அதிகம் போன்ற பிரச்னைகளால் ஜெயலலிதா பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் மருத்துவர் இக்குழு இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மேலும் ஜெயலலிதாவுக்கு தற்காலிகமாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டதாகவும் டிசம்பர் 3ஆம் தேதி அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, டிசம்பர் 4ஆம் தேதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுதான் மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார் என்றும், அவருக்கு இன்சுலின் உள்பட நோய் தன்மைக்கு ஏற்பதான் மருந்துகள் தரப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். அவருடைய மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக கேள்வி எழுப்ப்பப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் உள்பட பலரையும் விசாரித்தது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கு 13ஆவது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தங்களுக்கு மூன்று வார கால அவகாசம் கூடுதலாக வழங்கக் கோரி ஆறுமுகசாமி ஆணையம்  தமிழ்நாடு அரசுக்கு முன்னதாகக் கடிதம் அனுப்பியிருந்தது.

”ஆணைய விசாரணை குறித்து எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே மேலும் 3 வார காலம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்” என்று ஆணையத்தின் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.

ஆறுமுக சாமி ஆணையத்துக்கு கொடுக்கப்பட்ட அவகாசம் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தனது அறிக்கையை ஆணையம் வரும் வாரத்தில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget