மேலும் அறிய
Advertisement
Today Headlines: புத்தாண்டு கட்டுப்பாடு... கர்நாடகாவில் இரவு ஊரடங்கு...இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு... இன்னும் பல!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் நேற்று 619 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக சென்னையில் மாநகர காவல் துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
- அரசு போக்குவரத்து கழகப் பணியாளர்களுக்கான ஊதியம், பல்வேறு படிகள் மற்றும் சலுகைகள் குறித்த 14ஆவது ஊதிய ஒப்பந்த மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
- கடலோர மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்தியா:
- ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்தும் பொருட்டு கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.
- மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது
- இரவு நேர ஊரடங்கு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.
- விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் இந்திய இசையை இசைக்க மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஒப்புதல் அளித்துள்ளார்
உலகம்:
- பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.79 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
- புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசுகளை மக்கள் வெடிப்பதற்கு உகாண்டா அரசு தடை விதித்துள்ளது
- சூடான் நாட்டின் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 38 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விளையாட்டு:
- ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
- இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பௌலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
- இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்டின் நான்காவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது
- இந்திய அணி சார்பில் மிகக் குறைவான டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்து, அதிவிரைவாக 100 டிஸ்மிஸலை நிறைவு செய்த வீரர்களின் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி ரிஷப் பண்ட் முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion