மேலும் அறிய

2026 புத்தாண்டு ராசிபலன் - கன்னி ராசி

மற்ற அனைத்து ராசிகளை காட்டிலும் கன்னி ராசிக்கு மிகச் சிறப்பாகவே இந்த 2026 ஆம் ஆண்டு

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே வணக்கம்... உங்களுடைய ராசிக்கு 2025 ல் சில சங்கடங்களை கொடுத்தாலும் கூட எப்படியோ ஒரு வகையில் சமாளித்து வந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள். வருகின்ற 2026 உங்கள் ராசிக்கு ஜாக்பாட்...

 இதனால் வரையில் 10ம் இடத்தில் குரு பகவான் பிரவேசித்து வேலை இடத்தில் குழப்பத்தை கொடுத்தாலும்... மே மாதம் பிறகு... குரு பகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் வீட்டில் அமர்ந்து வாழ்க்கை அமோகமாக அமைத்துக் கொள்ள வழி செய்வார்... சொந்தமாக வீடு இல்லை என்று கவலைப்படுகிறீர்களா ஜூன் மாதத்திற்கு பிறகு வீடு அமைந்து விடும்.. நிலங்களை வாங்கி போட வேண்டும் என்று ஆசையோடு பணத்தை சேமித்து வைத்தவர்களுக்கு மே மாத இறுதிக்குப் பிறகு சூப்பர் டைம்....

 வாருங்கள் 2026 கிரகங்கள் உங்களுக்கு என்ன செய்யப் போகிறது என்பதை பற்றி பார்க்கலாம்... கேது பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டில் அமர்ந்து... ஆன்மீக சிந்தனைகளை அவ்வபோது கொடுத்து வந்தாலும் கூட... எது நம் கைவிட்டுப் போய் இருக்கிறது எது நம்மிடம் இருக்கிறது என்ற சிந்தனையை கொடுத்துக் கொண்டே இருப்பார்... என்ன மாதிரியான தவறுகளை நாம் செய்தோம் எந்த தவறுகளை நாம் செய்யக்கூடாது என்ற சிந்தனைகளையும் கொடுப்பார்.... எதிர்காலம் பற்றின பயம் இருந்தாலும் கூட குருபகவானின் பதினோராம் வீட்டு சஞ்சாரம் நல்ல நிம்மதியான தெளிவான முடிவுகளை உங்களை எடுக்க வைக்கும்....

 6ம் வீட்டில் அமர்ந்திருக்க கூடிய ராகு பகவான் நோய்களிலிருந்து அறுவை சிகிச்சையின் மூலமாகவோ அல்லது மருந்துகளின் மூலமாகவோ உங்களுக்கு தீர்வுகளை கொண்டு வருவார்.. உழைப்பதற்கு நீங்கள் தயாராகி விட்டீர்கள் பிறகு என்ன ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கும் உங்களுக்கு நல்ல வேலை அமையும்... தற்போது 2026 முதல் 6 மாதத்தில் வேலை சம்பந்தமாக சில தொந்தரவுகள் உங்களுக்கு இருக்கலாம்... அதாவது உயர் அதிகாரியின் அழுத்தம். வேலையில் அதிகப்படியான அழுத்தம்.. வேலை இருக்க கூடிய நண்பர்கள் மூலமாக சில தொந்தரவுகள்.. அல்லது உங்களுக்கே வேலைக்கு வர பிடிக்காத அளவுக்கான சூழ்நிலை.. இப்படி ஏதோ ஒன்று உங்களை ஜனவரி முதல் மே மாத இறுதி வரை அழுத்திக் கொண்டே இருக்கும்... அதற்காக நீங்கள் நான் வேலை மாறலாமா என்று கூட சிந்திப்பீர்கள்...

 என்னுடைய கருத்து இந்த காலகட்டத்தில் வேலையை விட்டு விட்டு வேறு ஒரு வேலைக்கு செல்ல வேண்டாம்... அப்படியே நல்ல வேலை கிடைத்தால் கூட குடும்பத்தாரோடு ஆலோசித்து முடிவெடுங்கள்... ஒருவேளை உங்களுக்கு தசா புத்தியின் அடிப்படையில் நல்ல வேலை கூட அமையலாம் ஆனால் சட்டென்று முடிவெடுக்காமல் ஒரு மாத தாமதப்படுத்தி பிறகு முடிவெடுங்கள்... சனி பகவானின் 7ம் வீட்டு சஞ்சாரம்.. வாழ்க்கைத் துணையின் மூலம் நல்ல அறிவுரைகள் உங்களுக்கு கிடைக்கும்.. அதே சமயம் நீங்கள் மிக வேகமாக செயல்பட்டு சில காரியங்களை முன்னெடுக்கும் பொழுது வாழ்க்கை துணையோ மிக மெதுவாக உங்களுடைய வேகத்திற்கு ஈடு கொடுப்பார்.. அப்பொழுது உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை துணைக்கும் இடையில் சில சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உண்டு... கவலை வேண்டாம் அது நிரந்தரமல்ல...

 பொருளாதாரம் முன்னேற்றத்தை பொருத்தவரை அஷ்டமாதிபதி என்று சொல்லக்கூடிய செவ்வாய் பகவான் ஜனவரி பாதியில் உச்ச நிலைக்கு அடைகிறார் ஐந்தாம் வீட்டில் உச்ச நிலை அடையும் செவ்வாய் பகவானால் உங்களுக்கு பூர்வீகத்தின் மூலமாக சொத்துக்கள் அதன் மூலமாக பணங்கள் வந்து உங்களுக்கு சேரும்... கடந்த இரண்டரை வருடங்களாக உங்களுக்கு எதுவுமே சரியாக நடக்கவில்லை என்பது தான் உண்மை... குறிப்பாக ராசியிலேயே கேது பகவான் அமர்ந்திருந்த சமயத்தில் சிக்கல்களையும் போராட்டங்களையும் கொண்டு வந்திருப்பார்... பொது வாழ்க்கையில் மனிதர்களை சந்திப்பதை தவிர்த்து விட்டு நீங்கள் ஒதுங்கி இருந்திருக்க கூடிய காலகட்டம் கூட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கலாம்....

 ஆனால் தற்போது நிலைமையே வேறு... குரு பகவான் உச்ச நிலைக்கு 11 ஆம் வீட்டில் அமரும் பொழுது வியாபாரத்தில் தொழிலில் நீங்கள் சந்திக்கக்கூடிய நன்மைகள் ஏராளம்... உங்களைப் பற்றி சுற்றி இருப்பவர்கள் உயர்வாக பேசுவார்கள்..... வேலை தளத்தில் மதிக்கப்படுவீர்கள்... குரு பகவானின் பார்வை சனி பகவான் மீது விடுவதால் ஜூன் மாதத்திற்கு தொடங்கி உங்களுடைய கடன் தொல்லை கஷ்டங்கள் மற்றும் விரயங்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படும்... புத்திர பாக்கியத்திற்காக ஏங்கி தவிக்கும் கன்னி ராசி அன்பர்களே உங்களுக்கான குழந்தை பாக்கியம் கிடைக்கப் போகிறது... மே மாதத்திற்கு பிறகு நல்ல செய்தி உங்கள் காதுகளுக்கு வந்து சேரும்...

  கேது பகவான் 12 ஆம் வீட்டில் அமர்ந்து தூக்கமின்மையை ஏற்படுத்துவார்... சிவபெருமானின் ஆலயத்திற்கு சென்று  தியானத்தில் ஈடுபடுங்கள்...  அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ அமைதியாக மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்தாலே பாதி பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டு விடும்....

  மற்ற அனைத்து ராசிகளை காட்டிலும் கன்னி ராசிக்கு மிகச் சிறப்பாகவே இந்த 2026 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை வாழ்த்துக்கள் வணக்கம்!!!

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் கனமழை, இடி மின்னல், பலத்த காற்று: சென்னை வானிலை எச்சரிக்கை
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் கனமழை, இடி மின்னல், பலத்த காற்று: சென்னை வானிலை எச்சரிக்கை
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Karuppu Muruganantham: கைவிட்ட கோர்ட்.. கைதாகிறாரா பாஜக முன்னாள் பிரமுகர் கருப்பு முருகானந்தம்?
Karuppu Muruganantham: கைவிட்ட கோர்ட்.. கைதாகிறாரா பாஜக முன்னாள் பிரமுகர் கருப்பு முருகானந்தம்?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Embed widget