மேலும் அறிய

மின் கட்டணத்தில் அலட்சியம்: மக்கள் வாக்குகளில் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்! ராமதாஸ் எச்சரிக்கை!

கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் தற்போது சென்னையின் ஒரு பகுதியில் மட்டும் சோதனை அடிப்படையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

மாதாமாதம் மின் கணக்கீடு செய்து மின் கட்டணம் வசூலிப்பதற்கு, ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துவதில் அலட்சியம் காட்டுவதா என்று கேள்வி எழுப்பியுள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், அரசின் மீதான கோபத்தை வாக்காளர்கள் வாக்களிக்கும்போது வெளிப்படுத்துவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பொருளாதார நெருக்கடி
 
’’தமிழ்நாட்டில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மின்கட்டணத்தை நிர்ணயிப்பதிலும், வசூலிப்பதிலும் நடைமுறை எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் தமிழ்நாடு அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறையால் நடுத்தரமக்கள் அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதுடன், பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகான மின்கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வலியிறுத்தி, அறிக்கை வெளியிட்டேன்.  
 
இந்நிலையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’2025-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகள், வணிக பயன்பாட்டிற்கான மின்இணைப்புகளுக்கு ஸ்மார்ட்மீட்டர் பொருத்த தமிழகஅரசு திட்டமிட்டுள்ளது.
 
முதற்கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 80 லட்சம் இணைப்புகளுக்கு பொருத்துவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்மீட்டர் மென்பொருள் மூலம் இயங்கவுள்ளது. இதன் மூலம்  மின்சாரத் திருட்டை தடுத்தல், துல்லியமாக மின்சாரத்தை கணக்கிடுதல், மின்சார பயன்பாட்டை ஒரேஇடத்தில் இருந்து கணக்கிடுதல் போன்றவற்றை ஸ்மார்ட்மீட்டர் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகளாகப் பட்டியலிடுகின்றனர்’’ என்றார். ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மின்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.  விரைவில் அவை பொருத்தப்படும். ஸ்மார்ட்மீட்டர் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிட்டு வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும்’’ என்றார். 

சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதா?
 
கடந்த ஆண்டு அமைச்சர் தங்கம் தென்னரசு ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த டெண்டர் விடப்பட்டது என்றார். டிசம்பர் மாதம் அமைச்சர் சிவசங்கர் இதையே முன் மொழிந்தார். கடந்த 2021-ம் ஆண்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் 221-வது வாக்குறுதியில் இரண்டு மாதங்களுக்கு 1,000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரையில் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டது. 

கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் தற்போது சென்னையின் ஒரு பகுதியில் மட்டும் சோதனை அடிப்படையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் நடைமுறைபடுத்த மேலும் 2 ஆண்டுகாலம் தேவைப்படும் என்றும் அதன் பின் மாதாமாதாம் மின் கணக்கீடு செய்ய அரசு முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வாக்களிப்பதில் கோபமா?
 
2026 சட்டசபைத்தேர்தல் கோடைகாலமான மே மாதம் நடைபெற வாய்ப்புள்ளது. அப்போது மின்சாரத்தை அதிக அளவு பயன்படுத்துவார்கள். இதனால் ஏற்படும் மின் கட்டண சுமையை ஏற்கும் அனைத்துத் தரப்பு மக்களும் தங்களின் கோபத்தை வாக்களிப்பதில் காண்பிப்பார்கள்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்? - சென்னை வானிலை அறிக்கை
தமிழகத்தில் 3 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்? - சென்னை வானிலை அறிக்கை
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
மலைகளின் ரகசிய அழகை ரசிக்கணுமா? ஆகஸ்ட் மாதத்தில் கண்டிப்பா போக வேண்டிய 5 இடங்கள்!
மலைகளின் ரகசிய அழகை ரசிக்கணுமா? ஆகஸ்ட் மாதத்தில் கண்டிப்பா போக வேண்டிய 5 இடங்கள்!
ஊழியர்களுக்கு புதிய பணி நேரம், விடுமுறை மாற்றம்.! பள்ளிக்கல்வித்துறை அதிரடி - எதற்காக தெரியுமா.?
ஊழியர்களுக்கு புதிய பணி நேரம், விடுமுறை மாற்றம்.! பள்ளிக்கல்வித்துறை அதிரடி - எதற்காக தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Embed widget