மேலும் அறிய

நீட் தேர்வு ரத்தை விரைந்து செயல்படுத்துங்கள்! - அரசுக்கு ஓ.பி.எஸ். அட்வைஸ்!

'நீட்' தேர்வு ரத்து குறித்த சட்டமுன்வடிவு வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரிலாவது நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு.

நீட் தேர்வு ரத்து நடவடிக்கைகளை ஆளும் அரசு விரைந்து மேற்கொள்ளவேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அந்தக் கட்சியின் செய்திக் குறிப்பில், ‘ஒரு பக்கம் 'நீட் தேர்வு' என்பதற்கு மூலக் காரணமாக இருந்துவிட்டு மறு பக்கம் 'நீட் தேர்வு எதிர்ப்பு' என்ற மாயத் தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்க நினைக்கும் தி.மு.க.வின் செயலை நினைக்கும்போது "குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும்" பழமொழிதான் என் நினைவிற்கு வருகிறது.

நீட் தேர்வு குறித்து குழு அமைக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் ஒரு கருத்தினை தெரிவித்த நிலையில், அதிமுக தனது நிலைபாட்டினை அறிவிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறி இருப்பதாக இன்று பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

காவேரி நதிநீர்ப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, 2010 ஆம் ஆண்டைய அணைப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு (Dam Safety Bill, 2010), நீட் தேர்வு, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி சட்டமுன்வடிவு தொடர்பான 2011 ஆம் ஆண்டைய 115-வது அரசமைப்பு திருத்த சட்டமுன்வடிவு (Constitution (115th Amendment) Bill 2011), 2013 ஆம் ஆண்டைய தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act, 2013), தீவிரவாதத்திற்கு எதிரான தேசிய மையத்தை அமைப்பது (Establishment of National Counter Terrorism Centre). 2011 ஆம் ஆண்டைய சுகாதாரத்திற்கான மனித வளங்கள் குறித்த தேசிய ஆணையச் சட்டமுன்வடிவு (National Commission for Human Resources for Health Bill, 2011), மாநில அரசை புறந்தள்ளிவிட்டு நேரடி பயன்கள் மாற்றத் திட்டத்தை (Direct Benefits Transfer Scheme) கொண்டுவார 2013 ஆம் ஆண்டு நடவடிக்கை எடுத்தது, 1968 ஆம் ஆண்டைய எல்லைப் பாதுகாப்புப் படைச் சட்டத்தில் (BSF Act) திருத்தங்களை கொண்டுவர முயன்றது என மாநில சுயாட்சிக்கு, மாநில உரிமைகளுக்கு, மாநில நலன்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தி.மு.க. அங்கம் வகித்த மத்திய அரசு எடுத்தபோது, அவற்றிற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய அமைச்சரவையிலிருந்து வெளிவராமல் அப்போதைய மத்திய ஆட்சியை தாங்கிப் பிடித்த தி.மு.க. இப்போது 'நீட்' தொடர்பான நிலைப்பாட்டை அதிமுக  அறிவிக்க வேண்டும் என்று கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பு உள்பட அனைத்து படிப்புகளுக்குமான மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதும், 'நீட்' தேர்வு உள்பட எந்தத் தேர்வும் அனுமதிக்கப்படக் கூடாது என்பதும் தான் அதிமுகவின்  நிலைப்பாடு. 'நீட்' தேர்வு உட்பட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தன் இறுதி மூச்சு வரை எதிர்த்தவர் ஜெயலலிதா. 

ஜெயலலிதாவின் நிலைப்பாடு தான் அதிமுகவின் நிலைப்பாடு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் அடிப்படையில்தான் நீட் தேர்வினை ரத்து செய்யும் வகையில், இரண்டு சட்டமுன்வடிவுகள் அதிமுக அரசால் 1-2-2017 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவை சட்டமாகாத சூழ்நிலையில், மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி, அதன் அடிப்படையில் ஏழை, எளிய அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் மருத்துவப் படிப்பினை படிக்க வழிவகை செய்தது அதிமுக அரசு.

நீட் தேர்வு காரணமாக கிராமப்புற மாணவர்களும், தமிழ்வழி பயில்கின்ற மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இதன் அடிப்படையிலும், தி.மு.க. வின் தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்பவும் சட்ட நடவடிக்கையை எடுக்காமல், மருத்துவச் சேர்க்கையில் 'நீட்' தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு அமைத்திருப்பது என்பது தாமதப்படுத்தும் செயல் என்று நான் ஏற்கெனவே எனது அறிக்கையின் வாயிலாக வெளியிட்டு இருந்தேன் என்பதை நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை காரணம் காட்டி இந்தப் பிரச்சனையை தி.மு.க. நீர்த்துப் போகச் செய்கிறதோ என்ற ஐயம் பொதுமக்களிடையே நிலவுகிறது. இதன்மீது விரைந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை.

'நீட்' தேர்வு ரத்து குறித்த சட்டமுன்வடிவு வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரிலாவது நிறைவேற்றப்பட்டு, உடனடியாக மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்பட வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. 'நீட் தேர்வு ரத்து' என்பதற்கு அதிமுக  தனது முழு ஒத்துழைப்பை நல்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, நீட் தேர்வினை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்தி, பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்த ஆண்டிலேயே மருத்துவப் படிப்பில் சேர்க்கை நடைபெற ஆவன்ன செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: 3 சீட்டுக்கு 300 பேர் மல்லுக்கட்டு... ராஜ்யசபா எம்.பி.,க்கு திமுகவில் கடும் போட்டி; போதாக்குறைக்கு காங்., வேற...!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"டெல்லியா இருந்தாலும்.. Local-ஆ இருந்தாலும் 2026 திமுக தான்" துணை முதல்வர் உதயநிதி அதிரடி
CM MK Stalin:
CM MK Stalin: "35 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு! 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
Anbil Mahesh: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Anbil Mahesh: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்குPawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"டெல்லியா இருந்தாலும்.. Local-ஆ இருந்தாலும் 2026 திமுக தான்" துணை முதல்வர் உதயநிதி அதிரடி
CM MK Stalin:
CM MK Stalin: "35 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு! 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
Anbil Mahesh: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Anbil Mahesh: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Kasthuri:
Kasthuri: "நடிகை கஸ்தூரி மீது பாய்ந்தது வழக்கு" 4 பிரிவுகளில் FIR போட்ட போலீஸ்!
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
Aishwarya Rajinikanth:மயிலம் முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
Aishwarya Rajinikanth:மயிலம் முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
Embed widget