மேலும் அறிய

Namal rajapaksa : இலங்கை தமிழ் மக்களை வரவேற்க தயார்.. ஸ்டாலினுக்கு பாராட்டு.. ராஜபக்சே மகனின் ட்வீட்!

2009 ல் நடைபெற்ற ஈழப்போர் முடிவடைந்த பிறகு, அப்போதைய ராஜபக்ச அரசாங்கம் தமிழகத்துக்கு சென்ற அகதிகளை வரவேற்றது

இனக் கலவரத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டிற்கு சென்ற இலங்கை வாழ் தமிழ் மக்களை வரவேற்கத் தயாராக இருப்பதாக இலங்கை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நமல் ராஜபக்சே தெரிவித்தார்.   

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், " இலங்கை அகதிகள் குறித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்கிறேன். அதே வேளையில், 2009 ல் நடைபெற்ற ஈழப்போர் முடிவடைந்த பிறகு, அப்போதைய ராஜபக்ச அரசாங்கம் தமிழகத்துக்கு சென்ற அகதிகளை வரவேற்றது.  சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் முயற்சியால் இதுவரை 3,567 குடும்பங்கள் இலங்கைக்குத் திரும்பியுள்ளனர்.நாடு திரும்பிய மக்களுக்கு வாழ்வாதார ஏற்பாடுகளை செய்யவும், வீடு கட்டித் தரவும் பலவேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாட்டில் இருந்து மீண்டும் தங்கள் தாயகம் திரும்பும் மக்களுக்கு பாதுகாப்பான வாழ்கையை அதிபர் கோட்டபய ராஜபக்சேவும், பிரதம மந்திரி மகிந்த ராஜபக்சேவும் உறுதி செய்வர்" என்று பதிவிட்டார். 

இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதலமைசச்சர் மு.க ஸ்டாலின்  முகாம் வாழும் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார்.

Namal rajapaksa : இலங்கை தமிழ் மக்களை வரவேற்க தயார்.. ஸ்டாலினுக்கு பாராட்டு.. ராஜபக்சே மகனின் ட்வீட்!

மேலும், முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கை அகதிகளுக்கும், வெளிப்பதிவில் உள்ள அகதிகளுக்கும் உரிய உதவிகளை வழங்கிடவும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், குடியுரிமை வழங்குதல் மற்றும் அவர்களில் இலங்கை திரும்பும் அகதிகளுக்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்தல் மாண்புமிகு போன்ற நீண்டகாலத் தீர்வினைக் கண்டறிய ஏதுவாகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்,  நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்,  பொதுத்துறைச் செயலாளர், மறுவாழ்வுத்துறை இயக்குநர் மற்றும் பிற அரசு உயர் அலுவலர்கள், அரசு சாரா உறுப்பினர்கள், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுடைய பிரதிநிதி மற்றும் வெளிப்பதிவில் வசிக்கக்கூடிய அகதிகளுக்கான பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழு நிச்சயமாக விரைவில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

இன்று சட்டசபையில் பேசிய அவர்,  இலங்கைத் தமிழர்களுக்கு நாம் இருக்கிறோம் என்ற உணர்வை வெளிப்படுத்துவதன் அடையாளமாக இலங்கை அகதிகள் முகாம் என்பது இனி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் எனப் பெயர்மாற்றம் செய்யப்படுவதாக தெரிவத்தார்.  

1983ஆம் ஆண்டு முதல் இதுவரை 3 இலட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்களில்,18 ஆயிரத்து 744 குடும்பங்களைச் சார்ந்த 58 ஆயிரத்து 822 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் அமைந்துள்ள 108 முகாம்களில் (இரண்டு சிறப்பு முகாம்கள் உள்பட) தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும், 13 ஆயிரத்து 540 குடும்பங்களைச் சார்ந்த 34 ஆயிரத்து 87 நபர்கள் காவல் நிலையங்களில் பதிவுசெய்து, வெளிப்பதிவில் வசித்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக அகதிகளாக முறையான அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவரக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு, இனி பாதுகாப்பான கௌரவமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்துத் தருவதை இந்த அரசு உறுதிசெய்யும் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.இதற்காக, அவர்கள் தங்கியிருக்கும் முகாம்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் நேற்றுக்கு முந்தைய தினம் அறிவித்தார். 

TN Assembly : இலங்கை தமிழ் அகதிகளின் குடியுரிமை பிரச்சனைக்கு, சிறப்புக் குழு - முதல்வர் ஸ்டாலின் 

இலங்கை அகதிகள் முகாம்.. மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனாAshwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget