Nallakannu 97 | எப்போதும் இவர் ஆதர்சம்.. காம்ரேட் நல்லக்கண்ணுவுக்கு 97-வது பிறந்தநாள்..
ஒரு தலைவருக்காக தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நிற்பதெல்லாம் அரிதிலும் அரிதான நிகழ்வு. அது நல்லக்கண்ணுவுக்கு நடந்தது
நல்லகண்ணு. இந்தப் பெயரை அரசியலில் இருந்து நீக்கிவிடவே முடியாது. கம்யூனிஸ்ட் என்ற வார்த்தைக்கும், அந்த வார்த்தை கொண்டிருக்கும் சித்தாந்தத்திற்கும் தொடர்ந்து நியாயம் சேர்த்துக்கொண்டே இருப்பவர். 1924 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தார் நல்லக்கண்ணு. பாரதியார் மற்றும் வ.ஊ.சி ஆகியோரால் சுதந்திர வேட்கை கொண்டு சிறிய வயதில் பல போராட்டங்களில் பங்கு கொண்டவர்.
நெல் மூட்டை பதுக்கலுக்கு எதிராக தனது சொந்த ஊரில் போராட்டத்தை தொடங்கிய நல்லக்கண்ணுவுக்கு வயது அப்போது 18. அந்த வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து மக்களுக்காக போராட ஆரம்பித்தவர் கிட்டத்தட்ட 79 வருடங்களாக மக்கள் சார்ந்த பிரச்னைகளுக்காக போராட்ட களத்தில் நிற்கிறார்.
எளிமையின் வடிவமாகவும், உரிமையின் குரலாகவும் ஒலித்துக்கொண்டிருக்கும் நல்லக்கண்ணுவுக்கு அரசு சார்பில் கொடுக்கப்பட்ட வீட்டை கடந்த ஆட்சியில் காலி செய்யசொன்னபோது ஒட்டுமொத்த அரசியல்வாதிகளூம் அவருக்கு ஆதரவாக நின்றனர். அது ஆளுங்கட்சிக்கு எதிரான நிலைப்பாடு அல்ல நல்லக்கண்ணுவுக்கு ஆதரவான நிலைப்பாடு.
ஒரு தலைவருக்காக தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நிற்பதெல்லாம் அரிதிலும் அரிதான நிகழ்வு. அது நல்லக்கண்ணுவுக்கு நடந்தது. அதற்கு காரணம் நல்லக்கண்ணு என்ற எளிமைதான்.
முக்கியமாக வீட்டை காலி செய்ய சொன்னபோது எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக அதை செய்தவர். கட்சி சார்பில் தனக்கு வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் நிதியை கட்சியின் வளர்ச்சிக்காக கட்சிக்கே திருப்பி கொடுத்தது என பக்குவப்பட்ட பண்புகளால் நிரம்பி நிற்பவர் தோழர் நல்லக்கண்ணு. அவர் இன்று 97ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Vaccines For Teens: சிறார்களுக்கான தடுப்பூசி.. பிரதமர் பேச்சுக்கும், பாரத் நிறுவன அறிக்கைக்கும் முரண்..எது உண்மை?
Rahane | நம்பர் '5' யார்? பாக்ஸிங் டே டெஸ்ட்டில் மீண்டெழுவாரா ரஹானே?