எம்.பி.யா இருந்தா எனக்கென்ன...? நாம தூங்குவோம்.. - வைரலாகும் மாணவனின் வீடியோ
தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 2 ஆண்டுகளுக்குப் பின் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.
பள்ளி ஒன்றில் ஆய்வு செய்த நிலையில் மாணவன் ஒருவன் தூங்கிய வீடியோவை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அது இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 2 ஆண்டுகளுக்குப் பின் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் பூ கொடுத்தும், மலர்கள் தூவியும் வரவேற்றனர்.
மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என தகவல்கள் பரவிய நிலையில் தமிழக அரசு அறிவித்த நாளில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் பள்ளிகளில் ஆய்வு செய்தும், மாணவர்களிடம் உரையாடிய வீடியோக்களும் வெளியாகியது.
வாழ்வின் பேரழகு
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 25, 2022
அரிட்டாபட்டி ஆய்வுப் பணியின் போது.
இடது பக்கம்,
மாநிலத்திலேயே வயது மூத்த ஊராட்சி தலைவி வீரம்மாள்(84)
மறுபக்கம் அன்று தான் பள்ளியில் சேர்ந்து அயர்ந்து தூங்கும் அன்பு சிறுவன்.
காலம் எதிரெதிராய் கண்முன்னே.#VillageVisit pic.twitter.com/SDt7QdUm1H
இதனிடையே மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில், வாழ்வின் பேரழகு அரிட்டாபட்டி ஆய்வுப் பணியின் போது இடது பக்கம், மாநிலத்திலேயே வயது மூத்த ஊராட்சி தலைவி வீரம்மாள்(84) மறுபக்கம் அன்று தான் பள்ளியில் சேர்ந்து அயர்ந்து தூங்கும் அன்பு சிறுவன். காலம் எதிரெதிராய் கண்முன்னே என பதிவிட்டுள்ளார்.
அதாவது அரிட்டாபட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் அவர் ஆய்வு செய்த போது அங்கு ஒரு மாணவன் தன்னை மறந்து வகுப்பறையில் தூங்கி கொண்டிருந்தான். அவரின் மறுபக்கத்தில் மாநிலத்திலேயே வயது மூத்த ஊராட்சி தலைவி வீரம்மாள் அமர்ந்திருந்தார். இதனைப் பார்த்த பலரும் சிறுவயதில் பள்ளிகளில் தாங்கள் தூங்கிய கதைகளையும், ஆசிரியரிடம் மாட்டிய கதையும் நியாபகம் வருவதாக கருத்து தெரிவித்து இந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்