மேலும் அறிய

watch video | ”மேக்கப் போடவே டைம் சரியா இருக்குமே , எப்படி பொது பிரச்சனைக்கு போவாங்க” - தமிழச்சி தங்கபாண்டியன் பளீச் பதில்!

"ஒரு பெண் பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் குறிப்பாக அரசியலுக்கு வந்துவிட்டால் அவர்கள் தங்கள் தோற்றத்தில் கவனம் கொள்ளக்கூடாது என்பார்கள்"

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் அவர்கள் பலருக்கும் ஃபேவரெட்.  எழுத்து, இலக்கியம் , அரசியல் என பிஸியாக இருக்கும் இவர் , தனது தோற்றத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். இது குறித்து பல விமர்சனங்கள் பொதுவெளியிலும் , சமூக வலைத்தளங்களிலும்  முன்வைக்கப்படும் சூழலில் அதற்கு அவரே நேர்காணல் ஒன்றில் பதிலடி கொடுத்திருக்கிறார்.   அதனை தனது சமூக வலைத்தள பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார். 


அந்த வீடியோவில் ”தமிழர்களே அழகுணர்ச்சி மிக்கவர்கள்தான். ஒரு அழகுநிலையத்துக்கு போய்தான் உங்களை அழகுப்படுத்திக்கனும்னு கிடையாது. வீட்டுல அரைக்குற தோசை மாவுதான் உங்களுக்கு சிறந்த ஸ்க்ரெப்பர். அதே போல பால் காய்ச்சும் பொழுது வரும் , பாலாடைகளை முகத்தில் பூசிக்கொண்டு யோகா, உடற்பயிற்சி, தோட்டவேலை போன்ற வேலைகளை செய்தாலே போதுமானது.  ஒரு பெண் பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் குறிப்பாக அரசியலுக்கு வந்துவிட்டால் அவர்கள் தங்கள் தோற்றத்தில் கவனம் கொள்ளக்கூடாது என்பார்கள். என்னை பல பேர் , இவங்க என்ன எம்.பி ஆக இருக்குறாங்க . அதன் பிறகும் தலையில பூ வச்சிருக்காங்க. இவங்க என்ன எம்.பி.ஆக இருக்கிறாங்க அதன் பிறகும் மேட்சிங்காக வளையல் போடுறாங்க என்பார்கள். எம்.பி ஆயிட்டா என்ன ..... உங்கள் கலை உணர்ச்சி , அழகுணர்ச்சி எல்லாத்தையும் விட்டுவிட வேண்டுமா ? எதற்காக விட வேண்டும். நான் ஆடம்பரமாக ஆடை அணியவில்லை. என்னை வைரத்தால் அலங்கரித்துக்கொள்ளவில்லை. நான் அணிவது அனைத்துமே கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்களால் செய்யப்பட்டது . மலர்களால் , சந்தனத்தால் உங்களை அலங்கரிப்பதும் நேர்த்தியாக வைத்துக்கொள்வதும் தமிழர்களின்  வாழ்க்கை முறை.  நிறைய பேர் சொல்லுவாங்க. இவங்களுக்கு மேக்கப் போடவே டைம் சரியா இருக்குமே , இவங்க எப்படி பொது பிரச்சனைக்கு போவாங்க என அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை. நான் பொது பிரச்சனைக்கு 6 மணிக்கு போக வேண்டுமென்றால் 4.30 மணிக்கெல்லாம் எழுந்துக்கொள்ள போகிறேன். நான் என்னை நேர்த்தியாக  வெளிப்படுத்துவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம் . நான் மற்றவர்களுக்காக அதை செய்வதில்லை. எனது மகிழ்ச்சிக்காக செய்கிறேன் “ என தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Thamizhachi Thangapandian (@__thamizhachi__)

தலைப்பு செய்திகள்

கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
CM Vijay: கையை காட்டிய முதலமைச்சர்.. விஜய்யைப் பார்க்க ஓடோடி வந்த பெண்கள் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
CM Vijay: கையை காட்டிய முதலமைச்சர்.. விஜய்யைப் பார்க்க ஓடோடி வந்த பெண்கள் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
TTV vs Vijay : திமுக ஆட்சியில் ரூ.758 கோடி... தவெக ஆட்சியில் ரூ.1038 கோடி ஆனது எப்படி? - விஜய்யிடம் கணக்கு கேட்கும் டிடிவி
திமுக ஆட்சியில் ரூ.758 கோடி... தவெக ஆட்சியில் ரூ.1038 கோடி ஆனது எப்படி? - விஜய்யிடம் கணக்கு கேட்கும் டிடிவி
TVK VCK: திமுக-வுடன் உறவு கொண்டாடும் திருமா..! பாமக-வுடன் கூட்டு சேருகிறதா தவெக?
TVK VCK: திமுக-வுடன் உறவு கொண்டாடும் திருமா..! பாமக-வுடன் கூட்டு சேருகிறதா தவெக?

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget