மேலும் அறிய

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: பணம், தங்கம், வெள்ளி கொண்டு செல்வதில் புதிய கட்டுப்பாடுகள்!

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் அட்டவணை வெளியானதையடுத்து, 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.இந்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வெளியிட்டார். அதன் அடிப்படையில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி, தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.அதேபோல் கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரிஆகிய இடங்களில் ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மேற்கு வங்காள மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: பணம், தங்கம், வெள்ளி கொண்டு செல்வதில் புதிய கட்டுப்பாடுகள்!

இந்த ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தேர்தல் அறிவிப்பு வெளியானதையடுத்து, பணம் அல்லது பொருட்கள் மூலம் வாக்காளர்களை கவரும் பணிகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான கண்காணிப்பை தொடங்கியுள்ளது.இதற்காக பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகளை மேற்கொள்ள உள்ளனர். ரொக்கம், தங்கம், வெள்ளிப் பொருட்கள் போன்றவற்றை கொண்டு செல்லும் செயல்பாடுகளும் கண்காணிக்கப்படுகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி, ஒருவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000-க்கு மேல் ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. அதற்கு மேல் பணம் எடுத்துச் செல்லும் போது வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, பான் கார்டு போன்ற உரிய ஆவணங்களை காட்ட வேண்டும். அவை இல்லாதபட்சத்தில் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும்.

ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை பணம் இருந்தால், மாவட்ட அளவிலான குழு ஆவணங்களை சரிபார்த்து பின்னர் விடுவிக்கும். ஆனால் ரூ.10 லட்சத்தை விட அதிகமாக இருந்தால் அந்த விவரம் வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட்டு மேற்படி விசாரணை நடத்தப்படும். பணம் எடுத்துச் செல்லும் போது அது யாருக்கு செல்கிறதோ, அவர்களின் அதிகாரப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் அனுப்பப்பட வேண்டும். மேலும் பணம் கொண்டு செல்லும் இடம் மற்றும் அதற்கான முகவரி தெளிவாக ஆவணங்களில் குறிப்பிடப்பட வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: பணம், தங்கம், வெள்ளி கொண்டு செல்வதில் புதிய கட்டுப்பாடுகள்!

பணம் எடுத்துச் செல்லும் நடவடிக்கை அதற்கான ஆவணங்களுடன் ஒத்துப்போக வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆவணங்கள் சரியாக இருந்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மீண்டும் திருப்பி வழங்கப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலத்தில், அரசின் செலவில் செய்த சாதனைகளை விளக்கும் விளம்பரங்களை செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சிகளில் வெளியிட அரசியல் கட்சிகளுக்கு அனுமதி இல்லை.

அதேபோல் அரசு கட்டிடங்களில் உள்ள அரசியல் தலைவர்களின் விளம்பரங்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட வேண்டும். இதன் அடிப்படையில் பல இடங்களில் சுவர் விளம்பரங்களை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலத்தில் அரசு புதிய நலத்திட்டங்கள், நிதி உதவிகள் அல்லது சலுகைகள் அறிவிக்க முடியாது. மேலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் புதிய பணியாளர்களை நியமிப்பதற்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளின் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்களில் அரசியல் தலைவர்களின் படங்கள் மற்றும் பெயர்கள் மறைக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் மறைக்கப்பட்டு அல்லது அகற்றப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஒரு பக்கம் அஜித்.. மறுபக்கம் தோனி! தல-யை கையில் ஏந்திய தளபதி விஜய்!
TVK Vijay: ஒரு பக்கம் அஜித்.. மறுபக்கம் தோனி! தல-யை கையில் ஏந்திய தளபதி விஜய்!
TN Election Candidates: எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
சென்னையில் 100 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்.. ஏப்ரல் 14 வரை வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை
சென்னையில் 100 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்.. ஏப்ரல் 14 வரை வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Candidates: எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
Flying Flea C6 Review: புதிய சகாப்தத்தில் ராயல் என்ஃபீல்டு: பறக்கும் பைக்- பர்ஃபார்மென்ஸ் எப்படி? ஃபுல் ரிவ்யூ!
Flying Flea C6 Review: புதிய சகாப்தத்தில் ராயல் என்ஃபீல்டு: பறக்கும் பைக்- பர்ஃபார்மென்ஸ் எப்படி? ஃபுல் ரிவ்யூ!
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
’’பள்ளிகள்கூட பாதுகாப்பில்லை; பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது’’- அன்புமணி கண்டனம்
’’பள்ளிகள்கூட பாதுகாப்பில்லை; பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது’’- அன்புமணி கண்டனம்
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
ரூ.1 கோடி உதவித்தொகை! ஏழை மாணவர்கள் கல்விக்கு அரசு அதிகம் செலவழிக்க வேண்டும் - விஐடி வேந்தர் பேச்சு
ரூ.1 கோடி உதவித்தொகை! ஏழை மாணவர்கள் கல்விக்கு அரசு அதிகம் செலவழிக்க வேண்டும் - விஐடி வேந்தர் பேச்சு
Embed widget