MK Stalin : ராஜா கையை வச்சா.. Wrong-ஆ போனது இல்ல! இசைஞானி இளையராஜா பொன்விழா: முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு சார்பில் "இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் இளையராஜா பொன்விழா நிகழ்வில் பேசினார்

"இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும் என்று இளையராஜாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டால்ன் இளையராஜா பொன்விழா நிகழ்வில் கோரிக்கை வைத்தார்.
இளையராஜா பொன்விழா :
தமிழ் திரை இசையை உலக அரங்கில் உயர்த்திய இசைஞானி இளையராஜா, திரை இசைத்துறையில் 50 ஆண்டுகளை கடந்ததை முன்னிட்டு, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக அரசு சார்பில்盛ந்த பூர்வமான பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
"சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் – இசைஞானி இளையராஜா பொன்விழா ஆண்டு 50" எனும் தலைப்பில் நடைபெறும் இவ்விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர்.
50 ஆண்டுகளாக தமிழ் இசைத்துறையில் தனித்துவமான பங்களிப்பைச் செய்த இளையராஜா, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பெருமையாகத் திகழ்கிறார். அவரது இசை, தமிழ்ச் சினிமாவின் அடையாளமாக மட்டுமல்லாமல், சர்வதேச தரத்தில் இசை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
எப்பவும் நீ ராஜா
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “இசையெனும் தேனை எல்லோருக்காகவும் தரும் தேனிக்காரர் இசைஞானி இளையராஜா. அவர் நமது இதயங்களை ஆளத் தொடங்கி அரை நூற்றாண்டு காலம் ஆகிறது ராஜாதி ராஜா இந்த ராஜா, நேற்று இல்லை நாளை இல்லை.. எப்பவும் நீ ராஜா
இசைஞானி கலைதாய்க்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல நம்மள்ளுடைய தமிழ்தாய்க்கும் சொந்தக்காரர். அதனால் தான் அவருக்கு இந்த பாராட்டு விழாவை நடத்திகிறோம். நிச்சயமா சொல்கிறேன் இசைஞானியை பாராட்டு விழா நடத்துவதில் நாம் தான் பெருமை கொள்ள வேண்டும்.
பனையபுரத்தில் இருந்து புறப்பட்டு திறமையும் உழைப்பும் இருந்தால் எப்பேர்ப்பட்ட உயரங்களையும் அடையலாம் என்று இந்த மனிதர் எடுத்துக்காட்டாக உள்ளார்.
இளையராஜா இல்லை இணையற்ற ராஜா.
இந்த அரை நூற்றாண்டு காலத்துல ராஜாவின் பாடல்களை முனுமுனுக்காத உதடுகளே தமிழ்நாட்டில் கிடையாது என்று சொல்லலாம். அவரின் பாடல்களை மனத்தில் வைத்து தங்களின் இன்பம் துன்பங்களை பொருத்தி பார்க்காத மனிதர்களே கிடையாது.
காதல் உணர்வுகள், வெற்றிய பயணத்தின் ஊக்கம், மன வலி ஆகியவற்றை ராஜாவின் பாடல்கள் ஆற்றுகிறது. இதனால் இவர் இளையராஜா இல்லை இணையற்ற ராஜா.
ஒரு ராஜா இருந்தால் அவருக்கென்று நாடு இருக்கும் , மக்கள் இருப்பாங்க, எல்லைகள் இருக்கும். ஆனால் இந்த ராஜா நாடுகளை கடந்தவர் மக்களை கடந்தவர் மொழிகளை கடந்தவர்.
ராஜா கையை வச்சா..
இளையராஜா தமிழ் இலக்கியங்களுக்கு இசையமைத்து இருந்தால் அவை அனைத்து சுலபமாக மனப்பாடம் ஆகி இருக்கும் என்று சமூக வலைதள பதிவு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் மேற்க்கொள்காட்டி பேசினார். எல்லோரும் முதலமைச்சரிடம் தான் கோரிக்கை வைப்பார்கள், நான் இளையராஜாவிடம் கோரிக்கை வைக்கிறேன்இளையராஜா இசையமைத்து ஆல்பங்களாக வெளியிட வேண்டும். அதன்மூலம் தமிழ்ச்சுவை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு பரிமாறப்பட வேண்டும். ராஜா கையை வைத்தால், அது Wrong-ஆ போவதில்லை என்பதால் இந்த கோரிக்கையை நீங்கள் ஏற்கவேண்டும்" என்றார்
இசைஞானி பெயரில் விருது:
அதே போல் தமிழக அரசு சார்பில் "இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும். இளையராஜாவுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.























