மேலும் அறிய

கீழே தயங்கி நின்ற அனிதா ராதாகிருஷ்ணன்! மேலே வரச் சொன்ன அமைச்சர் வன்னி அரசு - நீங்களே பாருங்க

கடந்தாண்டு ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் நினைவேந்தலில் கீழே நின்ற முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அமைச்சர் வன்னி அரசு மேலே அழைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

திருநெல்வேலியில் உள்ள கேடிசி நகரில் கடந்தாண்டு ஜுலை மாதம் பொறியாளர் கவின் என்ற செல்வகணேஷ் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்த காரணத்தால் அந்த பெண்ணின் சகோதரர் அவரை படுகொலை செய்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

கவின் முதலாவது நினைவு நாள்:

இந்த சூழலில், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவரது ஊரான ஆறுமுகமங்கலத்தில் இன்று அவரது குடும்பத்தை சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அனிதா ராதாகிருஷ்ணனை அழைத்த வன்னி அரசு:

முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் கவினின் நினைவு நாளில் அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது, ஆணவப்படுகொலைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டபோது வன்னி அரசு மேடையிலும், அனிதா ராதாகிருஷ்ணன் கீழேவும் இருந்தனர். 

அப்போது, முன்னாள் அமைச்சராக பொறுப்பு வகித்தவரை கீழே நிற்க வைக்கக்கூடாது என்ற அடிப்படையில் வன்னி அரசு அவரை மேலே அழைத்தார். அப்போது முதலில் இருக்கட்டும் என்று சைகை காட்டிய அனிதா ராதாகிருஷ்ணனை அங்கிருந்தவர்கள் மேடைக்கு அழைத்து வந்தனர். 

விஜய்யை விமர்சிக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்:

பின்னர், அமைச்சர் வன்னி அரசும், அனிதா ராதாகிருஷ்ணன் இருவரும் ஆணவப் படுகொலைக்கு எதிராக குரல் எழுப்பினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தவெக அரசையும், முதலமைச்சர் விஜய்யையும் அனிதா ராதாகிருஷ்ணன் திமுக மேடைகளில் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் முதலமைச்சரை தரக்குறைவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கவினுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் வன்னி அரசு விரைவில் ஆணவச் சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.  தவெக கூட்டணியில் இன்று இடம்பிடித்திருக்கும் விசிக, தேர்தல் முடிவுகளுக்கு முன்பு திமுக கூட்டணியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. தவெக ஆட்சியமைக்க 2 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், திருமாவளவன் தனது ஆதரவை அளித்தார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழக வரலாற்றிலேயே நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது யார் ஆட்சிக்காலத்தில் தெரியுங்களா?
தமிழக வரலாற்றிலேயே நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது யார் ஆட்சிக்காலத்தில் தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
Embed widget