மேலும் அறிய

Minister Ponmudi : பொன்முடிக்கு செருப்பை போட்டுவிட்ட திமுக நிர்வாகி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி

Minister Ponmudi DMK: அமைச்சர் பொன்முடியின் காலில் திமுக நிர்வாகி, குனிந்து அவரது செருப்பை மாட்டிவிட்ட வீடியோ தற்போது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடந்த இரத்ததானம் நிகழ்ச்சியில் படியேறி சென்ற அமைச்சர் பொன்முடியின் காலில் இருந்து செருப்பு கழன்றது. இதனை திமுக நிர்வாகி குனிந்து அவரது காலில் செருப்பை மாட்டிவிட்ட வீடியோ தற்போது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உதயநிதி பிறந்தநாள் விழா-ரத்த தான முகாம்:

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு ஏற்பாட்டில் இரத்ததான முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளரும், வனத்துறை அமைச்சர் முனைவர் பொன்முடி கலந்து கொண்டு   ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்பட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பொன்முடிக்கு செருப்பை போட்டுவிட்ட திமுக நிர்வாகி:

நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர்  பொன்முடி தனியார் மண்டபத்தின் படிக்கட்டில் அமைச்சர் பொன்முடி, செஞ்சி மஸ்தானின் தோளில் கையை வைத்தபடி பொன்முடி படிக்கட்டுகளில் ஏறி சென்றார்.  அப்போது, திடீரென்று அவர் அணிந்திருந்த செருப்பு கழன்றது. அமைச்சர் பொன்முடியின் இடதுகாலில் அணிந்திருந்த செருப்பு கழன்றது. இதனால் பொன்முடியால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை, அவர் அப்படியே நின்றார். இதையடுத்து பொன்முடியின் அருகே நடந்து சென்ற முன்னாள் மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான அசோகன் குனிந்து வனத்துறை அமைச்சரின் காலில் செருப்பை போட்டு விட்டார்.

இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருவதோடு சர்ச்சையாகி உள்ளது. இந்த வீடியோவை பார்ப்போர் பொன்முடி குனிந்து தனது செருப்பை சரிசெய்ய மாட்டாரா? கட்சி நிர்வாகியை வைத்து தான் செருப்பை காலில் போட்டு விட வேண்டுமா? என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இத்தகைய செயல் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைகள்

விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை கட்டடத் திறப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசினார். அப்போது, “பெண்களுக்கு திராவிட மாடல் முக்கியத்துவம் கொடுக்கிறது” என்று கூறிய பொன்முடி, ஒன்றியக் குழு தலைவரைப் பார்த்து, “ஏம்மா…நீ எஸ்.சி தானே…” என்று மேடையிலே சாதியை குறித்து பேசினார். அதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முதல்வர் ஸ்டாலின் பெருமையாகச் சொல்லிவரும் இலவச பயணத்தை,  பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறார்கள் என்றும், ‘ஓசி பஸ்’ என்றும் அமைச்சர் பொன்முடி ஒரு கூட்டத்தில் பேசினார். அவரது பேச்சு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

விழுப்புரத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை குறித்து பெண் ஒருவர் தெரிவித்த போது "எவ இவ" என அவர் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் விழுப்புரம் அருகே அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி தன்னிடம் குறைகளைக் கூறிய மக்களைப் பார்த்து "ஆமா எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சுட்டீங்க" என கூறினார். இதனைத் தொடர்ந்து, மார்ச் மாதம் கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி, திமுக ஆட்சியில் ஒரு குறையும் இல்லை என திராவிட மாடல் குறித்து பெருமிதமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது, கீழே இருந்த பெண் ஒருவர், "இங்கே எல்லாமே குறையாக தான் இருக்கு" என குற்றம் சாட்டினார். இதனைக் கேட்ட பொன்முடி, "நீ வாயை மூடு கொஞ்சம்" என மீண்டும் ஒரு பெண்ணை ஒருமையில் பேசியிருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget