மேலும் அறிய
Advertisement
சூடானில் இருந்து 270 பேர் தமிழகம் திரும்பி உள்ளனர் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்
சூடானில் இருந்து 270 பேர் தமிழகம் திரும்பி உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்
விழுப்புரம் : சூடானில் இருந்து 270 பேர் தமிழகம் திரும்பி உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார்.
மாநில சிறுபாண்மையினர் ஆணையம் சார்பில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கல்லூரிகளுக்கான பேச்சுப்போட்டிகள் விக்கிரவாண்டியிலுள்ள சூர்யா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப்போட்டியினை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், மாநில ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் 70 கல்லூரிகளை சார்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே , பெரியாரும் அம்பேத்கர் கண்ட சமூக ஜனநாயகம், திராவிடம் சொல்லும் பண்பாட்டு நெறி ஆகிய தலைப்புகளில் பேச்சு போட்டி நடைபெற்றதில் மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர்.
பேச்சு போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், சூடானில் சிலர் இருக்கும் தமிழர்கள் சிலர் தங்களுக்கு பிரச்சனை இல்லை என்று தெரிவித்துள்ளதாகவும், ஏற்கனவே திரும்பியவர்கள் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளதாகவும் இதுவரை 270 பேர் தமிழகம் திரும்பி உள்ளதாகவும், உக்ரைன் நாட்டில் இருக்கும் தமிழர்கள் தங்களுக்கு பிரச்சனை எதுவும் இல்லை என்றும் அப்படி பிரச்சனை என்றால் கண்டிப்பாக உதவி கேட்போம் என்று கூறியுள்ளதாக கூறினார். மேலும் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து திரும்பியவர்களுக்கு தமிழகத்தில் மருத்துவம் பயில ஒன்றிய அரசுக்கு கோப்புகள் அனுப்பியுள்ளதால் ஒன்றிய அரசின் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும், திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் தமிழிசைக்கு பெயர் இருப்பது திராவிட மாடல் தான் என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
கிரிக்கெட்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion