மேலும் அறிய

"16 மொழிகளில் பெரியார் கருத்துகள்" அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்!

தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட 30 நூல்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 18 ஆம் தேதி சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியில் வெளியிட உள்ளதாக அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் கருத்துக்கள் 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறையில் பெரியாரின் கருத்துக்களை அறிவியல் சார்ந்த நடைமுறைகளுடன் செயல்படுத்தி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகக் காட்சியில் அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், ஆப்பிரிக்க உள்பட 65  நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "முதலாவது ஆண்டு 24 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றன.

பன்னாட்டு புத்தகக் காட்சி:

2வது ஆண்டில் இது 40 நாடுகளாக அதிகரித்ததோடு 750 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின. இந்த ஆண்டு பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 64 நாடுகளாக உயர்ந்துள்ளது. மேலும், 1000 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார். 

சென்னையின் சர்வதேச புத்தகத் திருவிழாவுக்கு அனைவரையும் வரவேற்பதாக தெரிவித்த அமைச்சர், "தமிழ்நாட்டில் 2500 ஆண்டுகளைக் கொண்ட சிறந்த இலக்கிய வரலாறு உள்ளது. இலக்கியம், இசை மற்றும் கலையின் மையமாக சென்னை உள்ளது.

இந்த ஆண்டு 60 நாடுகளிலிருந்து பங்கேற்பாளர்கள் உள்ளனர். மேலும், இலவச நிலையங்கள், இலக்கிய பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை வெளியீட்டாளர்களுக்கு வழங்குகிறோம். பொலிவியா குழந்தை புத்தகக்காட்சியை வரவேற்கிறோம்.

"சர்வதேச மொழிகளில் பெரியாரின் கருத்துக்கள் மொழியாக்கம்"

தமிழ்நாடு மகத்தான கவிஞர்களின் பார்வைகளை எப்போதும் மதித்துள்ளது. உலக மொழிகளை தமிழுக்கு மொழிபெயர்ப்பதும், தமிழை உலக மொழிகளுக்கு மொழிபெயர்ப்பதும் முக்கியமாகும். மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்வதானது, 32 மொழிகளுக்கு 166 தமிழ் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழ் இலக்கியக் கொடை உலகளவில் பரவ வேண்டும். இது மொழிபெயர்ப்பு வாய்ப்புகளை வழங்குகிறது. தமிழை உலகளாவிய அளவிற்கு மொழிபெயர்க்க 35 இலக்கிய வல்லுநர்களை நாம் பயிற்சி செய்துள்ளோம். சென்னை சர்வதேச புத்தகத் திருவிழாவை மாபெரும் வெற்றியாக மாற்றுவோம்" என்றார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட 30 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 18 ஆம் தேதி சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியில் வெளியிட உள்ளார்.

மேலும் பெரியார் குறித்த கேள்விக்கு, பெரியாரின் கருத்துக்கள் 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை பெரியாரின் கருத்துக்களை அறிவியல் சார்ந்த நடைமுறைகளாக செயல்படுத்தி வருவதாக  அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகக் காட்சியின் தொடக்க விழாவில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, பபாசியின் தலைவர் சொக்கலிங்கம் உட்பட பல்வேறு பிற நாடுகளை சேர்ந்த பதிப்பத்தார்கள், எழுத்தாளர்கள் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 78 அரங்குகளும் மூன்று சிறுவர்களுக்கான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பன்னாட்டு புத்தகக் காட்சி திருவிழா 16ஆம் தேதியிலிருந்து 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தலைப்பு செய்திகள்

கல்பாக்கம் PFBR ரெடி! நவம்பரில் மின் உற்பத்தி... தமிழகத்திற்கு கிடைக்குமா 250 மெகாவாட்?
கல்பாக்கம் PFBR ரெடி! நவம்பரில் மின் உற்பத்தி... தமிழகத்திற்கு கிடைக்குமா 250 மெகாவாட்?
திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்...'நோ கட்டணம்'!.. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!
திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்...'நோ கட்டணம்'!.. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Embed widget