மேலும் அறிய

கோவில்பட்டி அருகே ரோட்டில் தடுமாறி விழுந்த நபர் உயிரிழப்பு.. விசாரணையில் வெளியான உண்மை!

எப்போதும் வீட்டிற்கு வந்து விடும் ஆனந்தராஜ் இரவில் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரை பல்வேறு இடங்களிலும் தேடினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நடுரோட்டில் 40 வயதுமிக்க நபர் தடுமாறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டியில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் கயத்தாறு உள்ளது. இங்குள்ள தேவர் நகரில் கந்தசாமி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தராஜ் என்ற 40 வயதுமிக்க மகன் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனந்தராஜ் அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் வடை மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். 

நீண்ட நேரம் மது அருந்திய ஆனந்தராஜ்

இப்படியான நிலையில் இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. அந்த வகையில் கயத்தாறு அருகே இருக்கும் இரட்டை குளம் பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் தாமஸ் என்பவருடன் நேற்று  முன்தினம் மது அருந்தியுள்ளார். பின்னர் தாமஸ் தனது வீட்டிற்கு சென்று விட்ட நிலையில்  ஆனந்தராஜ் வீட்டிற்கு புறப்படாமல் நீண்ட நேரமாகவே மது அருந்திய இடத்தில் அமர்ந்ததாக சொல்லப்படுகிறது.

இதனிடையே மது போதையில் இருந்தாலும் வீட்டிற்கு வந்து விடும் ஆனந்தராஜ் இரவில் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரை பல்வேறு இடங்களிலும் தேடினர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சாலை ஒன்றில் தலை குப்புற கவிழ்ந்த நிலையில் ஆனந்தராஜ் கிடந்துள்ளார். முதலில் அவர் மதுபோதையில் விழுந்திருக்கிறார் என உறவினர்கள் நினைத்து எழுப்பியுள்ளனர். 

சாலையில் உயிரிழந்த கிடந்த கோலம்

அவரிடம் இருந்து எந்தவித அசைவும் வராத நிலையில் சந்தேகமடைந்த அவர்கள் அவரை சோதனை செய்தபோது உயிரிழந்தது தெரிய வந்தது. உடனடியாக இந்த சம்பவம் குறித்து கயத்தாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த போலீசார் ஆனந்தராஜ் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக கயத்தாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஆனந்தராஜ் அளவுக்கு மீறிய அளவில் மதுபோதையில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். ஆனால் அவர் நிலை தடுமாறி விழுந்ததில் படுகாயமடைந்து உடனடியாக உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்ததாக கூறப்பட்டுள்ளது. எனினும் அவர் மரணத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தாலே இந்த மர்ம மரணம் குறித்த உண்மை வெளிப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆனந்தராஜூடன் இணைந்து மது அருந்திய தாமஸிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர் மது அருந்திய இடம், உயிரிழந்து கிடந்த இடம் ஆகிய பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் கயத்தாறு பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

8,618 பேரில் 1,539 பேர் மட்டுமே பயன்! புதுச்சேரி காமராஜர் கல்வீடு திட்டத்தில் என்ன நடக்கிறது?
8,618 பேரில் 1,539 பேர் மட்டுமே பயன்! புதுச்சேரி காமராஜர் கல்வீடு திட்டத்தில் என்ன நடக்கிறது?
தீபாவளி முன்பணக்கடன், போனஸ் தவெக ஆட்சியிலாவது கிடைக்குமா? பகுதிநேர ஆசிரியர்கள் 11,773 குடும்பங்கள் ஏக்கம்!
தீபாவளி முன்பணக்கடன், போனஸ் தவெக ஆட்சியிலாவது கிடைக்குமா? பகுதிநேர ஆசிரியர்கள் 11,773 குடும்பங்கள் ஏக்கம்!
கடல் அரிப்புக்கு இயற்கைத் தீர்வு தேடும் காரைக்கால் - களமிறங்கிய அதிகாரிகள்!
கடல் அரிப்புக்கு இயற்கைத் தீர்வு தேடும் காரைக்கால் - களமிறங்கிய அதிகாரிகள்!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!
School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!
IND vs NZ: கோலி - ரோகித் இஸ் பேக்! நாளை தொடங்குது முதல் ஒருநாள் போட்டி! பவுலிங்கில் கம்பேக் தருமா இந்தியா?
IND vs NZ: கோலி - ரோகித் இஸ் பேக்! நாளை தொடங்குது முதல் ஒருநாள் போட்டி! பவுலிங்கில் கம்பேக் தருமா இந்தியா?
Embed widget