Mettur: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் விபத்து: இருவர் உயிரிழப்பு; சிக்கியிருக்கும் பலர்
Mettur Thermal Power Station: மேட்டூர் அனல்மின் நிலைய விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 5 பேர் சிக்கியதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் இருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், 5 பேர் நிலக்கரிக்குள் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 840 மெகா அவார்டு 600 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று 840 மெகாவாட் மூன்றாவது அலகில் நிலக்கரி கையாளும் பிரிவில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது 50 அடி உயரத்தில் இருந்து நிலக்கரி சேமிப்பு தொட்டி பெல்ட் காலண்டர் கீழே விழுந்தது. இந்த விபத்தில் அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மீது நிலக்கரி குவியல் விழுந்ததால் வெங்கடேசன் பழனிச்சாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் ஸ்ரீகாந்த் (24), மனோஜ் குமார்(22), சீனிவாசன் (42), முருகன் (25), கௌதம் (24) ஆகிய ஐந்து பேரும் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அனல் மின் நிலைய ஆம்புலன்ஸ் வாகனங்கள் காயம் அடைந்த ஒப்பந்த தொழிலாளர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .
மேலும் இடர்பாடுகளில் சடலமாக கிடந்த வெங்கடேசன் பழனிச்சாமி ஆகிய இருவரின் உடலை முன்னிட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வேறு யாராவது நிலக்கரி குவியலில் சிக்கி உள்ளனரா என்ற கோணத்தில் ஜேசிபி வாகனங்கள் மூலம் தீயணைப்பு துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் விபத்து சம்பவம் குறித்து அனல் மின் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அடைந்த ஊழியர்களின் உறவினர்கள் தெர்மல் பகுதி முன்பு குவிந்ததால் பரபரப்பு நிலவியது