மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர் வரத்து 2,036 கன அடியில் இருந்து 2,047 கன அடியாக அதிகரிப்பு

குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரானது குறைந்து வந்த நிலையில் மீண்டும் சற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 1,735 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 2,036 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 2,047 கன அடியாக அதிகரித்தது.

மேட்டூர் அணையின் நீர் வரத்து 2,036 கன அடியில் இருந்து 2,047 கன அடியாக அதிகரிப்பு

அணையின் நீர் மட்டம் 104.77 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 71.16 டி.எம்.சி ஆகவும் உள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 8,000 கன அடியில் இருந்தது ஜனவரி 29 ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டுவரும் நீர் 300 கன அடியாக இருந்த நிலையில் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 750 கன அடியில் இருந்து 1500 கன அடியாக அதிகரிப்பு. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்கான பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீரானது மூடப்பட்டது . விவசாய பணிகள் முடிவடைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர் வரத்து 2,036 கன அடியில் இருந்து 2,047 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 104.35 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 26.41 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 441 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,265 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 47.75 கன அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 9.70 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 514 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..

பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு

Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?

Yercaud Floating Restaurant: ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLANArun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Yercaud Floating Restaurant: ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
Breaking News LIVE 5th OCT 2024: திருப்பதியில் ₹13.45 கோடியில் கட்டப்பட்ட சமையல் கூடம் : திறந்து வைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

Indian Israel Army: இஸ்ரேலால் அதிகரிக்கும் போர் பதற்றம் - இந்தியாவின் ராணுவ பலத்தை தாங்குமா? வெற்றி யாருக்கு?

”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?

Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி..எங்கு எப்போது பார்க்கலாம்.. ட்ராபிக் மாற்றங்கள் என்ன?

Embed widget