மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர் வரத்து 3,088 கன அடியில் இருந்து 2,313 கன அடியாக குறைவு

குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது. இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 3,702 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 3,088 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 2,313 கன அடியாக குறைந்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர் வரத்து 3,088 கன அடியில் இருந்து 2,313 கன அடியாக குறைவு

அணையின் நீர் மட்டம் 103.93 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 70.02 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 89 வது ஆண்டாக மே 24 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை மே மாதத்தில் திறக்கப்படுவது இதுவே முதல் முறை. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.5 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது நிறுத்தப்பட்டுள்ளது.

அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக 6,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் முழுமையாக நிறுத்தப்பட்டது. அணையில் இருந்து உபரி நீர் 2,500 கன அடி 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர் வரத்து 3,088 கன அடியில் இருந்து 2,313 கன அடியாக குறைவு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 85.4 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 13.37 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1036 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 179 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 33.15 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 4.68 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 517 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 83 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Embed widget